HOME»NEWS»SPORTS»cricket will rohit sharma play australia test series team india openers fate to be decided today vjr

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா ரோஹித்? ஹிட்மேனின் விதி இன்று முடிவு

India vs Australia | Rohit Sharma | ரோஹித் சர்மா காயத்திலிருந்து விடுப்பட்டதை டிசம்பர் 11-ம் தேதிக்குள் நிருபிக்க வேண்டும் என்று பிசிசிஐ கூறியிருந்தது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா ரோஹித்? ஹிட்மேனின் விதி இன்று முடிவு
ரோஹித் சர்மா
  • Share this:

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று தனது உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் வென்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி உடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விடுப்பில் செல்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மாவிற்கு ஐ.பி.எல் 2020 தொடரின் போது காயம் ஏற்பட்டது.



ரோஹித் சர்மா காயத்திலிருந்து விடுப்பட்டதை பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் டிசம்பர் 11-ம் தேதிக்குள் நிருபிக்க வேண்டும் என்று பிசிசிஐ கூறியிருந்தது. ரோஹித் சர்மா இன்று தனது உடல்நிலையை நிரூபித்தால் மட்டுமே ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க முடியும்.

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியல் ரோஹித் சர்மாவிற்கு தொடை பகுதியில் ஸ்கேன் மற்றும் யோ யோ டெஸ்ட்கள் நடத்தப்படும். இன்று மதியத்திற்குள் ரோஹித் சர்மா தனது உடல்தகுதியை நிரூபித்தாக வேண்டும். உடல்தகுதியை அவர் நிரூபிக்வில்லை என்றால் மீண்டும் அவர் உடல்தகுதியை நிரூபிக்க சில வாரங்களாகும் என்பது குறிப்பிடதக்கது.
Published by:Vijay R
First published: