Home /News /sports /

சென்னை சேப்பாக்கத்தில் ரோஹித் சர்மா உலகசாதனை படைக்க வாய்ப்பு

சென்னை சேப்பாக்கத்தில் ரோஹித் சர்மா உலகசாதனை படைக்க வாய்ப்பு

ரோகித் சர்மா கேப்டன்

ரோகித் சர்மா கேப்டன்

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்து, மே.இ.தீவுகள், இலங்கைக்கு எதிராக ஒயிட் வாஷ் வெற்றிகளைக் குவித்தது. இந்த வெற்றிகளுடன் டி20 உலகக்கோப்பையில் முதல் 2 போட்டிகளில் கடும் உதை வாங்கி பிறகு பெற்ற ஆறுதல் வெற்றிகளுடன் சேர்ந்து 12 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றுள்ளது இந்திய அணி.

மேலும் படிக்கவும் ...

    இதன் பிறகு இலங்கையுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது இந்திய அணி. அதன் பிறகு மார்ச் 26 முதல் ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்குகின்றன. இதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. ஐபிஎல் போட்டி முடிந்த கையோடு தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    இப்போது 12 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற இந்திய டி20 அணி அடுத்து தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் போது ஆப்கானின் தொடர் 12 டி20 வெற்றி என்ற உலக சாதனையை உடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 12 டி20களில் வென்றுள்ள இன்னொரு அணி ருமேனியா, அது டெஸ்ட் விளையாடும் நாடல்ல.

    இந்நிலையில் சென்னையில் ஜூன் 9ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா வென்று விட்டால் தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வென்ற முதல் அணி என்ற உலக சாதனையை ரோஹித் சர்மா தலைமையில் நிகழ்த்திக் காட்டும். அதனால் சேப்பாக்கத்தில் நடக்கும் இந்த போட்டிக்கு கூடுதல் கவர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஜூன் 9, 12, 14, 17, 19 ஆகிய தேதிகளில் 5 டி20 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Chepauk, India captain Rohit Sharma, India vs South Africa, T20

    அடுத்த செய்தி