Home /News /sports /

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 3 மாஸ் சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 3 மாஸ் சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ICC World Cup 2019 | Rohit Sharma | Sachin Tendulkar | நியூசிலாந்து போட்டிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 27 ரன்கள் அடித்தால் சச்சினின் சாதனையை முறியடிப்பார்.

  • News18
  • Last Updated :
உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். களத்தில் அவர் நிலைத்து நின்று ஆட தொடங்கினால் எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிகஸ்ர்களாக பறக்கவிடுவார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி உள்ள  ரோஹித் சர்மா 5 சதங்களுடன்647 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய தூணாக இருக்க கூடிய ரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் தனது அதிரடியை தொடர்ந்தால் 3 இமாலய சாதனைகளை அவர் படைப்பார்.

1) உலகக் கோப்பையில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 2003 உலகக் கோப்பையின் போது சச்சின் 673 ரன்கள் எடுத்ததே சாதனையாக உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 27 ரன்கள் அடித்தால் அந்த சாதனையை முறியடிப்பார்.

2) உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக சச்சின், ரோஹித் சர்மா 6 சதங்கள் விளாசி உள்ளனர். நாளை நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினால் அதிக சதம் அடித்தவர்களில் ரோஹித் முதலிடம் பிடித்து சாதனை படைப்பார்.

3)  53 ரன்களை ரோஹித் சர்மா கடந்தால் உலகக் கோப்பை தொடரில் 700 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாறு சாதனை படைப்பார்.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup, Rohit sharma, Sachin tendulkar

அடுத்த செய்தி