அந்த மாதிரியெல்லாம் எதுவும் யோசிக்கலங்க: ராகுல் திராவிட் பளிச் பதில்

ராகுல் திராவிட்

இந்த வீரர்களுடன் பணியாற்றுவதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். இந்த அனுபவம் அபாரமாக இருந்தது. இதைத்தாண்டி எதைப்பற்றியும் நான் யோசிக்கவில்லை என்கிறேன்.

 • Share this:
  இலங்கை அணிக்கு எதிராக இளம் இந்திய அணியை அழைத்துச் சென்று ஒருநாள் தொடரை இந்திய அணிக்கைப்பற்ற காரணமாக இருந்த தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட், இப்போதைக்கு இந்த அனுபவமே, அதை மகிழ்ச்சியுடன் செய்தேன் மற்றபடி தொலைநோக்காக எதையும் யோசிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

  ஒருநாள் தொடரை 2-1 என்று அபாரமாக வென்ற இந்திய அணி எதிர்பாராத கொரோனா தாக்குதலால் முதல் போட்டியைத் தவிர மற்ற 2 டி20 போட்டிகளில் படுதோல்வி அடைந்தது.

  இந்தத் தொடர் பற்றி ராகுல் திராவிட் கூறும்போது, “நான் இந்த அனுபவத்தை கொண்டாடுகிறேன். நான் இதைத்தாண்டி எதையும் யோசிக்கவில்லை. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதைச் செய்வதில் மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறேன். வேறு எந்த விஷயம் பற்றியும் நான் யோசிக்கவில்லை. இந்தத் தொடர் மீதுதான் கவனம் இருந்தது.

  Also Read: இந்திய கிரிக்கெட் அணியில் மேலும் 2 வீரர்களுக்குக் கொரோனா

  இந்த வீரர்களுடன் பணியாற்றுவதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். இந்த அனுபவம் அபாரமாக இருந்தது. இதைத்தாண்டி எதைப்பற்றியும் நான் யோசிக்கவில்லை என்கிறேன்.

  Also Read: ஒலிம்பிக் குத்துச் சண்டை: இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி - வரலாறு படைத்தார் லவ்லினா போர்கோஹெய்ன்!
   முழு நேர பயிற்சியாளர் எனும் பணி சவாலானது அதனால் அதைப் பற்றி எதுவும் யோசிக்கவில்லை. எனக்கு அதுபற்றி தெரியவில்லை” என்றார்.

  இந்திய அணியின் முழு நேர பயிற்சியாளரகா ரவிசாஸ்திரியின் ஒப்பந்தம் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. டி20 உலகக்கோப்பை எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ரவிசாஸ்திரியின் வயது இப்போது 59, இந்திய பயிற்சியாளராக இருக்க கட் ஆஃப் வயது 60, எனவே ரவிசாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக விரும்புவாரா என்பது தெரியாது.

  இந்நிலையில் இந்திய அணியில் குருணால் பாண்டியா தவிர, யஜுவேந்திர செகல், கிருஷ்ணப்பா கவுதம் இருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது, எனவே இவர்கள் உடனடியாக இந்தியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  Published by:Muthukumar
  First published: