ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் காயத்தால் பங்கேற்காத தல தோனி மீண்டும் எப்போது விளையாடுவார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு சுரேஷ் ரெய்னா பதில் அளித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. முதுகுப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் கூல் கேப்டன் தோனி திடீரென இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.
தோனி பங்கேற்காத நிலையில், சுரேஷ் ரெய்னா கேப்டனாக அணியை வழிநடத்தினார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, டூ ப்ளெசிஸ் 45 ரன்களும், வாட்சன் 31 ரன்களும் எடுத்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)
அடுத்துக்களமிறங்கிய ஹைதராபாத் அணி, பேர்ஸ்டோவ் (61), டேவிட் வார்னர் (50) ஆகியோரின் அதிரடியால் 16.5 ஓவரிகளில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
தோனி இல்லாத சி.எஸ்.கே அணியை ஹைதராபாத் எளிதாக வென்றது. தொடர்ந்து வெற்றி நடைபோட்டு வந்த சி.எஸ்.கே அணி தோல்வி அடைந்ததால், அந்த அணியின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ரசிகர்களை நோக்கி கையசைக்கும் தோனி. (CSK)
போட்டி முடிந்த பிறகு ரெய்னா பேசுகையில், “இது ஒரு நல்ல விழித்துகொள்ள வேண்டிய அழைப்பு என நான் நினைக்கிறேன். நாங்கள் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை. டூ ப்ளெசிஸ் மற்றும் வாட்சன் நல்ல துவக்கம் கொடுத்தனர். நாங்கள் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை. தோனி தற்போது நன்றாக இருக்கிறார். ஒருவேளை பெங்களூருக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அவர் விளையாடலாம்” என்று கூறினார்.
காலையிலேயே ஓட்டுப்போட்ட கிரிக்கெட் பிரபலம்... ரசிகர்களுக்கு முன்னுதாரணம்!
தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!
ஜானி பேர்ஸ்டோ, வார்னர் அதிரடி! சென்னையை எளிதாக வீழ்த்திய ஹைதராபாத் அணி
ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?
ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி இல்லை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!
ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!
தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.