இந்திய அணியில் மீண்டும் விளையாடுவாரா தோனி? ஷாக் பதிலளித்த ஹர்பஜன் சிங்

இந்திய அணியில் மீண்டும் விளையாடுவாரா தோனி? ஷாக் பதிலளித்த ஹர்பஜன் சிங்
தோனி - ஹர்பஜன் சிங்
  • Share this:
பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த பட்டியலில் தோனி பெயர் இடம்பெறாதநிலையில் அவர் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவாரா என்பதற்கு ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஏ பிளஸ் கிரேடில். மற்ற வீரர்கள் ஏ, பி, சி என மற்ற கிரேடுகளில் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் தோனி பெயர் இல்லாதது அவர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இல்லாததால் அவர் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தோனி இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவது குறித்து ஹர்பஜன் சிங் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.


அதில், ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. இந்திய அணிக்காக மீண்டும் விளையாடப் போவதில்லை என மன ரீதியாக தோனி தன்னை தயார்படுத்திக்கொண்டார். உலகக்கோப்பையில் இந்தியா தோற்ற போட்டியே தனது கடைசி போட்டி என தோனி அவரது நண்பர்களிடம் கூறியதாகவும் ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.
First published: January 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading