ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

திண்டாட வைக்கும் காயம்.. காத்திருக்கும் சிராஜ்.. மீண்டும் அணியில் இடம்பெறுவாரா பும்ரா?

திண்டாட வைக்கும் காயம்.. காத்திருக்கும் சிராஜ்.. மீண்டும் அணியில் இடம்பெறுவாரா பும்ரா?

பும்ரா

பும்ரா

எதிர்வரும் ஆசிய கோப்பைக்கும், உலகக்கோப்பைகளுக்கும் சிராஜ் நிச்சயம் இடம்பெறுவார் என்றே பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore [Bangalore], India

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் வந்தாலும் அவருக்கு அணியில் இடமிருக்குமா என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. காயம் காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக விலகிய பும்ரா தற்போது வரை அணிக்குத் திரும்பவில்லை. முக்கிய போட்டிகளில் இடம்பெறவிடாமல் அவரை காயம் துரத்துவதால் அவர் இந்திய அணியில் ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் ஏற்படுத்துவாரா என்பது சந்தேகமே.

கடந்த செப்டம்பர் மாதம் பும்ராவின் முதுகு பகுதியில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. அதனால் அதன்பின் நடந்த தென்னாப்பிரிக்கா உடனான தொடரிலும், ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவரால் விளையாட முடியாமல் போனது. மீண்டும் இலங்கையுடனான தொடரில் அவர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் காயம் காரணமாக அவர் வெளியேறினார். இதனால் பிப்ரவரி மாதத்தில் தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரிலும் இவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராகிவரும் நிலையில் அணியில் பும்ரா விளையாடாதது சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இலங்கை தொடரிலும் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து உடனான முதல் ஒருநாள் போட்டியிலும், சிராஜ் அற்புதமாகப் பந்துவீசினார். பும்ராவின் இடத்தை மெல்ல சிராஜ் பிடித்துவருவதாகவே ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் டெஸ்ட் பவுளராகவே பார்க்கப்பட்ட சிராஜ் ஐபிஎல்-யிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஷார்ட்டர் ஃபார்மேட்டுகளிலும் தன் பந்துவீச்சை நிரூபித்துள்ளார். சிராஜ் தனது ஆட்டத்தை அனைத்து விதமான போட்டிகளிலும் மேம்படுத்தியுள்ளார் என ரோகித் ஷர்மா நேற்று அவரை மிகவும் பாராட்டியுள்ளார்.

எதிர்வரும் ஆசிய கோப்பைக்கும், உலகக்கோப்பைகளுக்கும் சிராஜ் நிச்சயம் இடம்பெறுவார் என்றே பார்க்கப்படுகிறது. பும்ரா காயம் காரணமாக விளையாடாமல் இருந்தால் சிராஜ்ஜுடன் முகமது ஷமி இணைந்து பந்துவீசவும் வாய்ப்புகள் அதிகம். உம்ரான் மாலிக்கையும் வேகப்பந்துவீச்சாளராக இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புகள் அதிகம். எனவே பும்ரா விளையாடாமல் போனால் அணிக்கு நிச்சயம் பின்னடைவாக இருந்தாலும் அணிக்கு மற்ற வீரர்களும் விளையாடத் தயார் நிலையில் உள்ளதால் பிசிசிஐ பும்ராவின் இடம் குறித்து நிச்சயம் ஆலோசனை நடத்தும்.

அதுமட்டுமின்றி உலகக்கோப்பைக்கு முன்னால் பும்ராவிற்கு காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாலும் பிசிசிஐ அவருக்கு மாற்று வீரரை தயார்ப்படுத்துவதில் கவனம் செலுத்தும். பும்ரா இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் உலகக்கோப்பையில் களமிறங்கப்போகும் இந்திய அணிக்கு அது நல்லதாக அமையாது.

First published:

Tags: BCCI, Indian cricket team, Jasprit bumrah, Mohammed siraj