ஒரே ஓவரில் 6 சிக்சர், 25 பந்தில் சதம்... அடித்து நொறுக்கிய இளம் வீரர்!

நான் 98 ரன்கள் எடுக்கும் வரை சதம் அடிப்பேன் என நம்பவில்லை என்று வில் ஜேக்ஸ் கூறியுள்ளார்

news18
Updated: March 22, 2019, 9:22 AM IST
ஒரே ஓவரில் 6 சிக்சர், 25 பந்தில் சதம்... அடித்து நொறுக்கிய இளம் வீரர்!
வில் ஜேக்ஸ்
news18
Updated: March 22, 2019, 9:22 AM IST
இங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசியதுடன் 25 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து கவுண்ட்டி அணிகளுக்கு இடையேயான டி-10 போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. சர்ரே - லாங்கஷைர் அணிகளுக்கிடையேயான போட்டியில் சர்ரே அணியின் பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். ஆட்டத்தின் 5-வது ஓவரில் சதம் அடித்தார் வில் ஜேக்ஸ்.


Loading...
20 வயதான வில் ஜேக்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களுடன் 30 பந்துகளில் 105 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.முன்னதாக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அஜாம் 26 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

10 ஓவர் முடிவில் 176 ரன்களை எடுத்தது சர்ரே அணி. லாங்கஷைர் அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சர்ரே அணி.

இதுகுறித்து பேட்டியளித்த வில் ஜேக்ஸ், ‘நாங்கள் 10 ஓவரில் 120 ரன்கள் எடுப்போம் என அனைவரும் நம்பினர். ஆனால் நான் அதை அதிகப்படுத்த விரும்பினேன். நான் 98 ரன்கள் எடுக்கும் வரை சதம் அடிப்பேன் என நம்பவில்லை’ என்று கூறியுள்ளார்



Also watch

First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626