இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஆரஞ்சு வண்ணத்தில் மாறுகிறதா?

ஜூன் 30ம் தேதி நடைபெறும் இங்கிலாந்துடனான போட்டியில் இந்திய அணியினர் ஆரஞ்சு வண்ண ஜெர்சியை அணிவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Web Desk | news18
Updated: June 20, 2019, 4:57 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஆரஞ்சு வண்ணத்தில் மாறுகிறதா?
ஆரஞ்சு வண்ண உடையில் இந்திய கிரிக்கெட் அணி?
Web Desk | news18
Updated: June 20, 2019, 4:57 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடி வரும் இந்திய அணியின் ஜெர்சி, இங்கிலாந்துடனான போட்டியில் மாறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது நீல நிற ஜெர்சியை அணிந்து விளையாடும் இந்திய அணியின் ஜெர்சியின் நிறம் மாறப்போவதாக நீண்ட நாட்களாக பேசப்பட்டுவருகிறது.

ஜெர்சியில் ஆரஞ்சு வண்ணம் அதிகம் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, அதன் புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகின.

சனிக்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணியினர் புதிய ஜெர்சியை அணிவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் 30-ம் தேதி நடைபெறும் இங்கிலாந்துடனான போட்டியில், புதிய ஜெர்சி அணிவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் புதிய உடையைப் பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். இதுவரை இந்திய அணிக்கு 24 முறை உடை மாற்றப்பட்டுள்ளது. அந்த உடைகளில் நீல நிறமே அதிகமாக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also watch: 56 சவரன் தங்க நகைகளை 2 பெண்கள் பெட்டியோடு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி!

First published: June 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...