ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தொடரை வெல்லுமா இந்திய அணி? – நாளை இலங்கையுடன் 2ஆவது ஒருநாள் போட்டி…

தொடரை வெல்லுமா இந்திய அணி? – நாளை இலங்கையுடன் 2ஆவது ஒருநாள் போட்டி…

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை நடைபெறும் ஆட்டத்திலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று ஆடும் லெவனில் கேப்டன் ரோஹித் சர்மா மாற்றங்களை செய்வாரா அல்லது அதே அணியுடன் களம் இறங்குவாரா என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையுடன் நடந்து வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 373 ரன்கள் குவித்தது. அடுத்து பேட் செய்த இலங்கை 306 ரன்கள் எடுத்து 67 ரன்கள் வித்திசாயத்தில் தோல்வி அடைந்தது.

முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஏற்கனவே மோசமான ஃபார்ம் காரணமாக கடும் நெருக்கடியில் இருக்கும் கே.எல்.ராகுல் இந்த போட்டியில் 39 ரன்களை மட்டுமே எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் சேர்த்தார். அவருக்கு பதிலாக நாளைய ஆட்டத்தில் சூர்ய குமார் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

கடந்த போட்டியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றிருந்தனர்.

‘பும்ரா இல்லாமலேயே விளையாட பழகிக்கொள்ள வேண்டும்’ – இந்திய அணியின் பவுலிங் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

நாளைய 2ஆவது போட்டியில் பெரும்பாலும் இதே வீரர்கள் களத்தில் இறங்க வாய்ப்புள்ளது. 2ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டால, 3ஆவது போட்டியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cricket