ICC World Cup 2019 | சச்சினைப் போல் வெற்றிக் கோப்பையுடன் விடைபெறுவாரா தல 'தோனி'!

#ViratKohli | #MSDhoni | #IndiavSouthAfrica | #TeamIndia | 37 வயதாகும் மகேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும்.

ICC World Cup 2019 | சச்சினைப் போல் வெற்றிக் கோப்பையுடன் விடைபெறுவாரா தல 'தோனி'!
மகேந்திர சிங் தோனி
  • News18
  • Last Updated: June 4, 2019, 6:35 PM IST
  • Share this:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமை, மகேந்திர சிங் தோனியின் அனுபவத்துடன் இந்திய அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து மண்ணில், உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா களைகட்டியுள்ளது. நடப்புத் தொடரில் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட அணிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வரிசையில் இந்தியாவும் உள்ளது.

இதற்கு காரணம், ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள கோலி, ரோஹித். இவர்களுடன் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தோனி, ஹர்திக் பாண்டியா என வலுவான பேட்டிங் வரிசையை இந்திய அணி கொண்டுள்ளது.
பந்துவீச்சில், நம்பர் ஒன் வீரரான ஜஸ்பிரித் பும்ரா, 7 மற்றும் 8ம் இடங்களில் உள்ள குல்தீப் யாதவ், யஸ்வந்தர் சாஹல் உள்ளனர். இவர்களுடன் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி என கலவையான அணியாக இந்தியா விளங்குகிறது.

எனவே, எந்தவொரு அணியையும் வீழ்த்தும் வல்லமையுடன் உள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் நாளை தென்னாப்பிரிக்காவுடன், சவுத்தாம்ப்டன் மைதானத்தில் மோதுகிறது.இதையடுத்து, ஜூன் 9-ல் ஆஸ்திரேலியாவுடனும், 13-ம் தேதி நியூசிலாந்துடனும், 16-ல் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிரப்ஃபோர்டு மைதானத்தில் பாகிஸ்தானுடனும் இந்தியா பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

தொடர்ந்து, ஜூன் 22-ல் ஆப்கானிஸ்தானையும், 27-ல் மேற்கிந்திய தீவுகளையும், 30-ல் இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது இந்தியா.மேலும், ஜூலை 2-ம் தேதி வங்கதேசத்துடனும், ஜூலை 6-ல் இலங்கையுடனும் மோதவுள்ளது.உலகக் கோப்பையை பொறுத்தவரை, 1975-ம் ஆண்டு தொடங்கியது முதல் அனைத்து தொடர்களிலும் இந்தியா விளையாடி வருகிறது. இதில், 1983-ல் கபில்தேவ் தலைமையிலும், 2011-ல் தோனி தலைமையிலும் இந்தியா மகுடம் சூடியுள்ளது.

இந்த முறை, விராட் கோலி தலைமையின் கீழ் முதல் முறையாக இந்தியா உலகக் கோப்பையில் களம் கண்டுள்ளது. கடந்த 2015-ல் அரையிறுதியுடன் வெளியேறிய இந்தியா, நடப்புத் தொடரில் சாதிக்கும் முனைப்பில் காத்திருக்கிறது.

முன்னதாக, நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த போதும், வங்கதேசத்துக்கு எதிரான அடுத்த போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்திய அணியில், 4-வது இடத்தில் இறங்கும் வீரர் யார் என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிராக சதம் விளாசி லோகேஸ் ராகுல் அதற்கு விடையளித்துள்ளார். மேலும், தோனியும் அதிரடியாக ஆடி சதம் விளாசியதன் மூலம் நடுவரிசை பலமாக இருப்பது உறுதியாகியுள்ளது.எனவே, முன்வரிசை வீரர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் நடப்பு உலகக் கோப்பையில் எதிரணிகளுக்கு இந்தியா அச்சுறுத்தலாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

இதனிடையே, 37 வயதாகும் மகேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும் என்பதால், வெற்றிக் கோப்பையுடன் விடை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

First published: June 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading