ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி - தொடரை வெல்லுமா இந்திய அணி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி - தொடரை வெல்லுமா இந்திய அணி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், மூன்று போட்டிகளை கொண்ட டி-20 தொடரை கைப்பற்றும் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Guwahati [Gauhati] | Tamil Nadu | Delhi

  தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி-20 போட்டி கவுஹாத்தியில் இன்று நடைபெறுகிறது.

  இந்தபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், மூன்று போட்டிகளை கொண்ட டி-20 தொடரை கைப்பற்றும் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், மழை அச்சுறுத்தல் இருப்பதால் போட்டி முழுமையாக நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

  டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகல் - தகவல்

  முதல் டி-20 போட்டியில் காயமடைந்த இந்திய வேகப் பந்து வீச்சாளர் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்று டி-20 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த காரணத்தால், இன்றைய 2வது டி-20 போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் தென்னாப்ரிக்க அணி களமிறங்குகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: India team, India vs South Africa, South Africa, T20