இன்று நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று,தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டிகள் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி டை-யில் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய மகளிர் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரை தொடரில் 1-1 என சமநிலை வைத்தது.
பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியில் 2 பேருக்கு வைரஸ் தொற்று… ரசிகர்கள் அதிர்ச்சி
இதையடுத்து கடந்த புதன் அன்று நடந்த மூன்றாவது 20 ஓவர் போட்டியில், ஆஸ்திரேலிய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இன்று நான்காவது 20 ஓவர் போட்டி மும்பையின் பிராபோன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும்.
இதனை தவிர்ப்பதற்காக இந்திய மகளிர் அணி இன்று கடுமையாக விளையாடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்வதற்கான வாய்ப்பை, இந்திய அணி தக்க வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற பி.டி. உஷா…
அந்த வகையில் இன்று நடைபெறும் ஆட்டம் தொடரின் முக்கியமான போட்டி என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய சூழலில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு டிபார்ட்மெண்டில் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றி விட்டால், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் உலகக்கோப்பை 20 ஓவர் போட்டியில், இந்திய அணி கூடுதல் மன பலத்துடன் களம் இறங்கும்.
இந்திய அணி வீராங்கனைகள்-
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா சிங் தாக்கூர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, தேவிகா வைத்யா, எஸ் மேகனா, ரிச்சா கோஹோஷ்னா தியோல்.
ஆஸ்திரேலிய அணி –
அலிசா ஹீலி (கேப்டன்), தஹ்லியா மெக்ராத் (துணை கேப்டன்), டார்சி பிரவுன், நிக்கோலா கேரி, ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், ஹீதர் கிரஹாம், கிரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜோனாசென், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷுட் மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian women cricket