டெல்லியில் அதிகரித்த காற்று மாசு.... இந்தியா - வங்கதேசம் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நடக்குமா?

இந்திய வீரர்கள் தீவிர மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.வங்கதேச அணியினரும் முகமூடி அணிந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய வீரர்கள் தீவிர மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.வங்கதேச அணியினரும் முகமூடி அணிந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமடைந்துள்ள போதும் இந்திய அணி நாளைய போட்டியில் விளையாடத் தயாராக இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3-டி 20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி நாளை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

காற்று மாசு காரணமாக டெல்லியில் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலாவது 20 ஓவர் போட்டியை டெல்லியிலிருந்து மாற்ற பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

காற்று மாசு காரணமாக இங்கு போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், எந்த மாற்றமும் ஏற்படாது என பிசிசிஐ தெரிவித்தது. மைதானத்தில் உள்ள மரங்கள் மீது நீரைப் பீய்ச்சி அடித்து மாசை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மாசு ஏற்படுத்தும் அம்சங்களை கண்டறியவும் உத்தரவிடப்பட்டுள்ளது

இதனிடையே நாளை நடைபெறும் முதல் டி-20 போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.வங்கதேச அணியினரும் முகமூடி அணிந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

ரோஹித் சர்மா தலைமையில் ஷிகர் தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், க்ருணல் பாண்டியா, யுவேந்திர சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, ஷிவம் டூப், சர்துல் தாகுர் உள்ளிட்ட வீரர்கள் களமிறங்க உள்ளனர்Also watch

Published by:Prabhu Venkat
First published: