Home /News /sports /

உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறுமா இங்கிலாந்து? காத்திருக்கும் சவால்

உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறுமா இங்கிலாந்து? காத்திருக்கும் சவால்

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

ICC World Cup 2019 | England | இங்கிலாந்து அணி இந்த 3 போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

  • News18
  • Last Updated :
உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதி சுற்றுக்குள் தகுதி பெறும் வாய்ப்பை தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இழந்துள்ள நிலையில் மற்ற அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

உலகக் கோப்பை தொடரில் நேற்று(ஜூன் 23) வரை 30 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. மற்ற அணிகளுக்கிடையே தான் கடும்போட்டி நிலவி உள்ளது.

உலகக் கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளி பெற்று தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி அடுத்து வரும் 3 போட்டிகளிலும் முதல் 3 இடங்களில் அணியுடன் மோத உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியாவை இங்கிலாந்து எதிர்கொள்ள வேண்டும்.

இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொள்ள வேண்டுமெனில் அதிக ரன்ரேட் உடன் 2 போட்டிகளாவது வென்றாக வேண்டும். இங்கிலாந்திற்கு அடுத்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் மீதமுள்ளதால் இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பு சவாலாகவே இருக்கும்.

இங்கிலாந்து அணி இந்த 3 போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

8 புள்ளிகளுடன் இங்கிலாந்து அரையிறுதியில் முன்னேற வரும் போட்டிகளில் முடிவு இதுப்போன்று அமைய வேண்டும்...

இலங்கை அணி அடுத்த 3 போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும்

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணி 2 போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்

மேற்கிந்திய தீவுகள் அணி 1 போட்டியில் தோற்க வேண்டும்

Also Watch :கோலி, பும்ராவிற்கு ஓய்வு! பிசிசிஐ அறிவிப்பு

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup

அடுத்த செய்தி