மும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வா?

IPL | மும்பை - சென்னை அணிகள் போதும் போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

மும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வா?
தோனி மற்றும் சக வீரர்கள். (IPL)
  • News18
  • Last Updated: April 26, 2019, 12:09 PM IST
  • Share this:
தோனியை போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கச் சொல்வது மிகவும் கடினமானது என்று சென்னை அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி.

இதனால் ஏப்ரல் 17-ம் தேதி நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்கவில்லை. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா தலைமை தாங்கினார். அந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.


தோனி இல்லாத சென்னை அணியால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பால் அவதிப்பட்டு வந்தாலும் அடுத்தடுத்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

Dhoni Batting, CSK, IPL

இந்நிலையில், அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்தன. இது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘எனக்கு தெரிந்த வரை தோனி எந்த போட்டியில் இருந்தும் விலகுவதை விரும்பமாட்டார். சிஎஸ்கேவுக்காக விளையாடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். சென்னை அணி என்பது அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. சிஎஸ்கே அணியின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவரை போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கச் சொல்வது மிகவும் கடினமான ஒன்று’ என்று கூறியுள்ளார்
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி


மும்பை - சென்னை அணிகள் போதும் போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று பழி தீர்க்க சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.Also watch

First published: April 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்