ஐ.பி.எல் தொடரில் இருந்து வார்னர், பேர்ஸ்டோவ் விலகல்... ஹைதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சி!

Will be very hard to fill #Warner and #Bairstow's boots: #KaneWilliamson | ஹைதராபாத் அணி இன்னும் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.

ஐ.பி.எல் தொடரில் இருந்து வார்னர், பேர்ஸ்டோவ் விலகல்... ஹைதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சி!
பேர்ஸ்டோவ் - வார்னர். (Twitter)
  • News18
  • Last Updated: April 30, 2019, 1:42 PM IST
  • Share this:
ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பல வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாக இருந்த வார்னர், பேர்ஸ்டோவ் இணை எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரின் 48-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி தொடக்க வீரர் வார்னர் (81) அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.

Warner, வார்னர்
வார்னர் அதிரடி அரைசதம். (IPL)அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 45 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி, ரன்ரேட் அடிப்படையில் நல்ல நிலையில் உள்ளது. ஆனால், இன்னும் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லமுடியும்.

இந்த முக்கியமான சூழலில், அந்த அணியின் வெற்றி இணையாக வலம் வந்த டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்குவதை அடுத்து, ஆஸ்திரேலியாவின் வார்னரும், இங்கிலாந்தின் பேர்ஸ்டோவும் அவர்களது நாடுகளுக்கு திரும்பினர்.

Warner, Bairstow
பேர்ஸ்டோவ் மற்றும் வார்னர். (IPL)
இவர்கள் இருவரின் இடத்தையும் நிரப்புவது மிகவும் கடினம் என ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

கோமதி மாரிமுத்து-க்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை - அதிமுக அதிரடி அறிவிப்பு!

கே.எல்.ராகுல் அதிரடி வீண்... பஞ்சாபை வீழ்த்தியது ஹைதராபாத்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading