முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஆஸ்திரேலிய அணி கம்பேக் கொடுக்குமா?’ – ரோஹித் சர்மா சொன்ன சூப்பர் பதில்…

‘ஆஸ்திரேலிய அணி கம்பேக் கொடுக்குமா?’ – ரோஹித் சர்மா சொன்ன சூப்பர் பதில்…

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளை அதிகம் விரும்புகிறது. அதில் பெருமைக்குரிய சாதனைகளை படைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணி கம்பேக் கொடுக்குமா? என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ள பதில் கவனம் ஈர்த்துள்ளது. மெச்சூரிட்டியாக ரோஹித் சர்மா பதில் அளித்திருப்பதாக அவரது ரசிகர்கள் கூறியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி உலகிலேயே நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. அந்த அணி, இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு பெட்டிப் பாம்பாக அடங்கினர். இந்திய ஸ்பின்னர்கள் மட்டுமே 2 இன்னிங்ஸ்களில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஆஸ்திரேலிய அணியுடைய வியூகங்களில் இந்திய அணியிடம் எடுபடவில்லை. இந்நிலையில் அடுத்த போட்டி டெல்லி மைதானத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆஸ்திரேலிய அணி கம்பேக் கொடுக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது- எப்போதுமே ஆஸ்திரேலிய சிறந்த அணியாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி கடந்த எப்படி விளையாடியது என்பதை நாம் நினைத்துப் பார்க்கவில்லை. நிகழ்காலத்தில் ஒரு அணி சிறப்பாக விளையாட வேண்டும் அதுமட்டுமே வெற்றியைத் தரும்.

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் சிலர் இடம்பெறவில்லை. இதேபோன்று இந்திய அணியிலும் முக்கியமான ப்ளேயர்கள் இல்லை. ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளை அதிகம் விரும்புகிறது. அதில் பெருமைக்குரிய சாதனைகளை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி கம்பேக் கொடுக்கும் என்பது குறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். அப்படி ஃபார்முக்கு அந்த அணி வந்தால் அதனால் என்ன செய்ய முடியும் என்பதும் எங்களுக்கு தெரியும். முதல் போட்டியில் விளையாடியதைப் போலவை மற்ற ஆட்டங்களிலும் நாங்கள் விளையாட விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Cricket