ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

INd vs Ban | கே.எல்.ராகுல் மிஸ் செய்த இந்த ஒரு கேட்ச்... இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்

INd vs Ban | கே.எல்.ராகுல் மிஸ் செய்த இந்த ஒரு கேட்ச்... இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்

ராகுல் தவறவிட்ட கேட்ச்

ராகுல் தவறவிட்ட கேட்ச்

Ind vs Ban | வங்கதேச அணியின் கடைசி விக்கெட்டின் கைக்கு வந்த கேட்சை விக்கெட் கீப்பர் ராகுல் தவறவிட்டதால் இந்திய அணி தோல்வியை தழுவியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக விக்கெட் கீப்பர் ராகுல் விட்ட கேட்ச் பார்க்கபடுவதால் அவரை ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 41.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 186 ரன்களை எடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் பின்வரிசையில் இறங்கிய கே.எல்.ராகுல் நிலைத்து நின்று விளையாடி 73 ரன்களை சேர்த்தார். வங்கதேசம் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஹகிப்-உல்-ஹசன் 5 விக்கெட்கைள வீழ்த்தினார்.

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி முதலில் இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. முதல் ஓவரிலே சாண்டோ விக்கெட்டை தீபக் சாஹார் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லிண்டன் தாஸ் 41 ரன்களுக்கு ஷாகிப் ஆல் ஹாசன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 136 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து இருந்த வங்கதேச அணியின் கடைசி விக்கெட்டுக்கு ஹாசன் மிர்ஸ் மற்றும் முஸ்தாபிர் ரகுமான் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இதையும் படிங்க:வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.. கடைசி விக்கெட்டில் கோட்டை விட்ட இந்தியா

கடைசி விக்கெட்டிற்கு பாரட்டனர்ஷிப் அமைத்த இந்த ஜோடியால் இந்திய அணி பவுலர்கள் திணறினர். 50 ரன்கள் பார்டன்ர்ஷிப் அமைத்து வங்கதேச  அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர். பரபரப்பாக சென்ற போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கே.எல்.ராகுல் கைக்கு வந்த கேட்ச் உள்ளது. வங்கதேச அணிக்கு 42 பந்துகளில் 1 விக்கெட் கைவசம் இருக்க 29 ரன்கள் தேவைப்பட்டது. அப்போழுது ஷர்துல் தாக்கூர் வீசிய பந்து அடித்த மெஹிதி ஹசன் மிராஸ் எட்ச் ஆகி விக்கெட் கீப்பர் ராகுலிடம் சென்றது.

கைக்கு வந்த அந்த சேட்சை ராகுல் தவறவிட்டார். இதனால் இந்திய வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 1-0 என்ற கணக்கில் வங்கசேதம் முன்னிலையில் உள்ளது.அந்த கேட்சை ராகுல் பிடித்து இருந்தால் இந்திய அணி அப்போழுதே வெற்றி தழுவி இருக்கும். இதனால் கே.எல்.ராகுலை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.

First published:

Tags: India vs Bangladesh, Kl rahul