பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 301 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் விரட்டி 307/5 என்று வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. மேற்கிந்திய மண்ணில் முதன் முதலாக ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது நியூசிலாந்து.
இந்த வெற்றி மூலம் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை லீக் அட்டவணையில் நியூசிலாந்து 12 போட்டிகளில் 11-ல் வென்று 110 புள்ளிகளுடனும் நெட் ரன் ரேட்டில் 1.263 என்றும் 4ம் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி மாறாக 24 போட்டிகளில் 9-ல் மட்டுமே வென்று 15-ல் தோல்வி அடைந்து 90 புள்ளிகளுடன் மைனஸ் 0.738 நெட் ரன் ரேட்டில் 7ம் இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து அணி இலக்கை விரட்டும் போது மார்டின் கப்டில் (51), டெவன் கான்வே (56), டாம் லேதம் (69), டேரில் மிட்செல் (63) ஆகியோர் அரைசதங்களை விளாச கடைசியில் இடது கை ஆக்ரோஷர் ஜேம்ஸ் நீஷம் இறங்கி 11 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் யானிக் கரியா என்ற ஸ்பின்னர் 9 ஒவர்களில்ல் 77 ரன்கள் கொடுத்து செம சாத்து வாங்கினார், ஆனால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அல்ஜாரி ஜோசப் 9 ஓவர் 61 ரன் 1 விக்கெட்.
வெஸ்ட் இண்டீஸில் மற்றபடி ஜேசன் ஹோல்டர் 7 ஓவர் 37 ரன் 2 விக்கெட். கெவின் சின்க்ளைர் என்ற புதிய ஸ்பின்னர் 10 ஓவர் 45 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார். நியூசிலாந்து பேட்டிங்கின் போது டேரில் மிட்செல் 42வது ஓவரில் ஸ்கோர் 248 ஆக இருக்கும் போதும் டாம் லேதம் ஸ்கோர் 44வது ஓவரில் 259 என்று இருந்த போதும் ஆட்டமிழந்தனர். ஆனால் ஜேம்ஸ் நீஷம் இறங்கினார், கரியா என்ற ஸ்பின்னரை 45வது ஓவரில் 18 ரன்கள் விளாசினார். கடைசியில் நிகலஸ் பூரன் பந்தை சிக்சருக்கு அனுப்பி 17 பந்துகள் மீதமிருக்கையில் நியூசிலாந்தை வெற்றி பெறச் செய்தார்.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷேய் ஹோப் (51), கைல் மேயர்ஸ் (105, 110 பந்து, 12 பவுண்டரி 3 சிக்ஸ்), நிகலஸ் பூரன் (91, 55 பந்துகள், 4 பவுண்டரி 9 சிக்ஸ்) இவர்கள் ஆட்டமிழந்தவுடன் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்து கடைசியில் அல்ஜாரி ஜோசப் 20 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் ஒருவாறு 301 ரன்களை எட்டியது, நியூசிலாந்து தரப்பில் அதிவேக பௌலர் பெர்கூசன் செம சாத்து வாங்கினார். இவர் 10 ஒவர்களில்ல் 6 பவுண்டரி 6 சிக்சர்களை கொடுத்தார், நிகலஸ் பூரனிடம் செம சாத்து வாங்கினார் பெர்கூசன். ஆனால் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்த அடியிலும் சாண்ட்னர் 10 ஓவர் 38 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தினார். டிம் சவுத்தியும் 10 ஒவர் 47 என்று டைட் செய்தார்.
ஆனால் கடைசியில் நியூசிலாந்து வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ஆட்ட நாயகன் டாம் லேதம், தொடர் நாயகன் மிட்செல் சாண்ட்னர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: New Zealand, ODI, West indies