ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

WI vs IRE| அயர்லாந்து வரலாறு படைத்தது- வெஸ்ட் இண்டீஸை நொறுக்கி தொடரை வென்றது

WI vs IRE| அயர்லாந்து வரலாறு படைத்தது- வெஸ்ட் இண்டீஸை நொறுக்கி தொடரை வென்றது

வெற்றி பெற்ற அயர்லாந்து

வெற்றி பெற்ற அயர்லாந்து

 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :

  அயர்லாந்து, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான கோவிட் பாதித்த ஒருநாள் தொடரில் கடைசிபோட்டியில் அயர்லாந்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை 2-1 என்று கைப்பற்றி அயர்லாந்துக்கு வெளியே ஐசிசி முழு உறுப்பினர் அணிக்கு எதிராக வரலாறு படைத்தது.

  முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து தோற்றது அடுத்த 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது, அயர்லாந்தில் ஜிம்பாப்வே முழு உறுப்பினர் நாடாக இருந்த போது அந்த அணியை வீழ்த்தியதையடுத்து ஐசிசி முழு உறுப்பினர் நாட்டுடன் அயர்லாந்து பெறும் 2வது வெற்றியாகும் இது.

  மேற்கிந்திய தீவுகளை 45 ஓவர்களில் 212 ரன்களுக்கு சுருட்டிய அயர்லாந்து, 45வது ஓவர் முடிவில் 214-8 என்று வெற்றியை எட்டியது. கோவிட்-19-னால் இந்தத் தொடருக்கு அயர்லாந்து வெற்றி ஒரு குறிப்பிடத்தக்க முடிவாகும், ஆனால் இது இருபது-20 போட்டியில் அயர்லாந்தின் சொந்த வரலாற்று தோல்வியுடன் தொடங்கியது.

  ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தப் போட்டியில் அயர்லாந்தின் விரட்டலின் போது முதல் பந்தில் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் இழந்தார், ஆனால் பேட்டிங் முக்கியமாக பொறுமைத்தனத்துடனும் நடைமுறை ரீதியாகவும் இருந்தது. ஆனால் தயாராக இருந்த டாப் ஆர்டர் தனது வேலையைச் செய்தது.

  ஸ்டாண்ட்-இன் கேப்டன் பால் ஸ்டர்லிங், ஸ்லிப்பில் ஜேசன் ஹோல்டரால் கேட்ச் விடப்பட்டார். இதனையடுத்து 38 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 44 ரன்கள் எடுத்தார். ஸ்டர்லிங் 73-2 என்ற நிலையில் வெளியேறினார்.

  நம்பர் 3 பேட்டர் ஆண்டி மெக்பிரைன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 100 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆல்ரவுண்ட் திறமையை நிரூபித்தார். கடைசியில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

  அவர் 152-3 ரன்களில் ஆட்டமிழந்தார், இறுதியில் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகளின் 30 விக்கெட்டுகளில் 10 விக்கெட்டுகளை மெக்பிரைன் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

  நம்பர் 4 ஹாரி டெக்டர் 76 பந்துகளில் 52 ரன்களுடன் மூன்று போட்டிகளில் மூன்றாவது அரை சதத்தைப் பதிவு செய்தார். 42-வது ஓவரில் 197-6 ரன்களில் அவுட் ஆனபோது டெக்டர் அயர்லாந்தை வெற்றியின் விளிம்பிற்கு உயர்த்தினார்.

  அகீல் ஹுசைன் மூலம் மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது. ஆனால் டெய்ல் எண்டர் கிரெய்க் யங் அயர்லாந்தின் வெற்றியை 5.1 ஓவர்கள் மீதம் உள்ள நிலையில் ஒரு பவுண்டரியுடன் உறுதி செய்தார்.

  முதல் ஒருநாள் போட்டி சபைனா பார்க்கில் நடந்த போது வெஸ்ட் இண்டீஸ் 269 ரன்கள் அடித்து வென்றது, 2வது போட்டியில் அயர்லாந்து வென்றது, நேற்று மீண்டும் அயர்லாந்து வென்றது.

  தொடக்க ஆட்டக்காரர் ஷேய் ஹோப் மேற்கிந்திய தீவுகளுக்கு சிறந்த அடித்தளத்தை வழங்கினார். அவரது எட்டாவது பவுண்டரி எட்டாவது ஓவரில் அணியின் 50 ரன்களை உயர்த்தியது மற்றும் 10வது ஓவரில் அவரது ஒன்பதாவது பவுண்டரி அவரது அரை சதத்தை 37 பந்துகளில் எடுக்க உதவியது. இவர் 53 ரன்களில் டாப் எட்ஜில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அனி 72/0 என்பதிலிருந்து 119/7 என்று நொறுங்கியது.

  இந்த சரிவுக் காலக்கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. மெக்பிரைன் தான் நிகலஸ் பூரன், ஷம்ரா புரூக்ஸ், அதிரடி மன்னன் கிரன் பொலார்ட் ஆகியோரை காலி செய்தார். இந்நிலையில் 150 கூட வராது என்ற நிலையில் ஜேசன் ஹோல்டர் 44 ரன்கள் எடுத்தார், ஆனால் இவருக்கு 30-ல் கேட்ச் விடப்பட்டது. அகீல் ஹுசைன் 23 ரன்கள் எடுத்தார். ஒடியன் ஸ்மித் 20 நாட் அவுட்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cricket, Ireland, ODI, West indies