• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தோல்விக்கு காரணம் என்ன? ரோஹித் சர்மா பதில்

தோல்விக்கு காரணம் என்ன? ரோஹித் சர்மா பதில்

INDvBAN

INDvBAN

India vs Bangladesh | Rohit Sharma | வங்கதேச அணி நிதானமாக ஆடி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது.

  • Share this:
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தற்கு பீல்டிங்கில் செய்த சில தவறுகள் தான் காரணம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முஹமதுல்லா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டி செய்த இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டியின் ஆரம்பத்தில் இந்திய அணி வீரர்கள் ரன்குவிக்க முடியாமல் திணறினர். இந்திய அணி சார்பில் ஷிகார் தவான் அதிகபட்சமாக 41 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி நிதானமாக ஆடி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் டி20 போட்டியில் இந்திய அணியை முதன்முறையாக வென்றது வங்கதேசம்.



வங்கதேச அணியுடனான தோல்விக்கு பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “பேட்டிங்கில் இந்திய அணி நல்ல ஸ்கோரை தான் எட்டியது. ஆனால், பில்டிங் செய்யும் போது சில தவறுகளை செய்து விட்டோம். தவறு எங்கள் பக்கம் தான். இதனால் தான் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டோம். வங்கதேச அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது“ என்றார்.

Also Watch : 52 ஹோட்டல்கள்... ஆண்டுக்கு 300 கோடி... அசத்தும் இளம் பெண் தொழிலதிபர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: