Home /News /sports /

கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் அதிகம் சாதித்த கோலி: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்?

கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் அதிகம் சாதித்த கோலி: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்?

Virat kohli

Virat kohli

Virat kohli | இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்களில் விராட் கோலி யாரும் சாதிக்க முடியாத உயரத்தை எட்டியுள்ளார்.

விராட் கோலியை புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் அவரை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால், அவரை புறக்கணிக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியின் 80 ஆண்டு கால வரலாற்றில் பல சாதனையாளர்களர்கள் இருந்துள்ளனர். ஆனால், விராட் கோலி அதில் தனித்துவமானவர். வேறு ஒருவரின் சாயலும் இல்லாதவர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் நேற்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கேப்டனாக கருதப்படும் விராட் கோலி அவருடைய கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். தென் ஆப்பிரிக்கா நாட்டில்வைத்து அவர்களுக்கு எதிரான தொடரை வெல்வதற்கு கிடைத்த வரலாற்று வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டிருந்தது.

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருப்பது மதிப்பிற்குரிய ஒன்று. பல ஜாம்பவான்கள் இருந்த இடம் அது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனாக இருந்தவர் சி.கே.நாயுடு. 1932-ம் ஆண்டு கேப்டனாக இருந்தார். இந்திய டெஸ்ட் அணி முதல்முறையாக லாலா அமர்நாத் கேப்டனாக இருக்கும்போதுதான் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. மன்சூர் அலி கான் பாடாடி கேப்டனாக இருக்கும்போது வெளிநாடுகளில் இந்திய டெஸ்ட் அணி முதல் வெற்றியையும் முதல் தொடர் வெற்றியையும் பதிவு செய்தது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சவுரவ் கங்குலி, எம்.எஸ்.தோனி இந்திய அணியை உள்நாட்டு மைதானங்களிலும், வெளிநாட்டு மைனதானங்களிலும் வலுவுள்ள அணியாக மாற்றினர்.

இதுவரை இருந்த கேப்டன்கள் கொண்டு வராத உயரத்துக்கு இந்திய அணியை விராட் கோலி கொண்டுவந்தார். 2015-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக வந்தவுடன் 68 டெஸ்ட் போட்டிகளில் 40 போட்டிகளில் வெற்றி. 17 போட்டிகளில் தோல்வி. 11 போட்டிகள் டிரா என்று நிலையை அடைந்தார். அவருடைய வெற்றி சதவீதம் 58.82 சதவீதமாக உள்ளது. அவருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் மட்டுமே உள்ளார். அவருடைய வெற்றி சதவீதம் 71.92%, ரிக்கி பாண்டிங்கின் வெற்றி சதவீதம் 62.33% ஆகும். 25 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்த வேறு எந்த சர்வதேச போட்டிகளுக்கான கேப்டன்களின் வெற்றி சதவீதமும் கோலியை விட அதிகம் கிடையாது. விராட் கோலி தலைமையில் வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Shocked!! கோலி பதவி விலகிய பின் ரோஹித் சர்மாவின் முதல் பதிவு


சாதனைகள் கோலிக்காக பேசும்போதும், ஒரு கேப்டனாக வெற்றியை உறுதி செய்திருக்க வேண்டும் என்பது கோலி எண்ணம். கோலியைப் பொறுத்தவரை விளையாட்டு திட்டமோ யுக்தி என்பது இல்லை. இதுவும் மனது தொடர்புடைய விளையாட்டுதான். கங்குலி சிறப்பாக செய்து ஒன்று. கோலி தன்னுடைய ஆக்ரோஷமான குணத்துடன் எதிரணிகளை எதிர்கொண்டார். தன் மனதில் பட்டதை பேசுவதிலிருந்து என்றும் அவர் விலகியது கிடையாது.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அணி டி20 உலக் கோப்பை போட்டிக்கு தயாராகிக்கொண்டிருக்கும்போது, டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிர்ச்சிகலந்த அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு காரணமாக, வேலைப் பளு அதிகமாக இருப்பதாகவும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். வேலைப் பளுவை புரிந்துகொள்ளுதல் என்பது மிக முக்கியமான ஒன்று. கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலும் தொடர்ச்சியாக விளையாடியுள்ளேன். கடந்த 6 ஆண்டுகளாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து கேப்டனாக இருந்ததுள்ளேன். இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தலைமையேற்க ஒரு சிறிய இடம் வேண்டும் என்று கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஓரிரு மாதத்தில் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து பி.சி.சி.ஐ விடுவித்தது. அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தது. இதுகுறித்து தெரிவித்த பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி, ‘விராட் கோலியை டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகக் கூடாது என்று கேட்டுக்கொண்டோம்’ என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய கோலி, இதற்கு நேர்மாறாக தெரிவித்தார். ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து நான் விடுவிக்கப்படும் செய்தி அந்த அறிவிப்பு வருவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்னர்தான் எனக்குத் தெரியும்’ என்று தெரிவித்தார்.

கோலி உள்பட இந்திய அணியின் கேப்டன்கள் வெளிநாடுகளில் விளையாடும் தொடர்களில் தோல்வியடைந்தது இது முதன்முறையல்ல. இது கடைசி முறையாகவும் இருக்கப் போவது அல்ல. எனவே, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தோல்வியடைந்ததன் காரணமாக கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன் என்பது அனுபவமற்ற ஒரு கருத்தாகவே அமையும்.

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகியுள்ள நிலையில் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவார். டெஸ்ட் அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு ரோஹித் சர்மாவுக்கு அதிகமாக உள்ளது. முன்னாள் துணைக் கேப்டன் அஜிங்கே ரஹானே அவருடைய துணைக் கேப்டன் பொறுப்பை இழக்கும் வாய்ப்பு உள்ளது. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு ள்ளது.

இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகளை ரோஹித் சர்மா எப்படி எடுத்துச் செல்லப் போகிறார் என்பதை அனைவரும் பார்க்கப் போகிறார்கள். ஆனால், உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் விராட் கோலியின் ஆக்ரோஷமான உணர்வுகளையும் வெறித் தனமான வெற்றிக் கொண்டாட்டத்தையும் இழக்கப் போகிறார்கள் என்பது உறுதி.

எப்படி இருந்தாலும் விராட் கோலியின் ரன் வேட்டைத் தொடரும். கேப்டன் கோலி அணியை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால், கிங் கோலி அங்கேயேதான் இருக்கிறார்.
Published by:Karthick S
First published:

Tags: Virat Kohli

அடுத்த செய்தி