INDvPAK | விஜய் சங்கரைத் தேர்வு செய்தது ஏன்? கோலி விளக்கம்

ICC World Cup 2019 | Team India | IndvPak | நாங்களும் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்ய நினைத்திருந்தோம் - விராட் கோலி

Vijay R | news18
Updated: June 16, 2019, 3:18 PM IST
INDvPAK | விஜய் சங்கரைத் தேர்வு செய்தது ஏன்? கோலி விளக்கம்
கோலியுடன் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி. (AFP)
Vijay R | news18
Updated: June 16, 2019, 3:18 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் காயத்தால் விலகி உள்ள ஷிகார் தவானுக்கு மாற்று வீரராக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரின் 22-வது லீக் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. போட்டியை காண மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்ட்ன சர்பராஸ் அஹமது பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். மழையின் காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் பந்துவீச்சை அவர் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



டாஸ் போட்டு முடித்த பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியதாவது, நாங்களும் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்ய நினைத்திருந்தோம். இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும். இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

விஜய் சங்கர்


காயத்தால் விலகி உள்ள ஷிகார் தவானுக்கு பதிலாக விஜய்சங்கர் இந்த போட்டியில் விளையாடுவார். அவர் நிதானமாக ஆடக் கூடியவர். சிறந்த ஃபில்டர், பகுதி நேர பந்துவீச்சாளராக அவரை பயன்படுத்த முடியும் என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளோம் என்றார்.

Also Watch

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...