Home » News » Sports » CRICKET WHY SOURAV GANGULY S HEART ATTACK HAS SHAKEN THE WORLD EXPLAINS DR DEVI SHETTY MUT

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இல்லை, சீரான உடற்பயிற்சி மேற்கொள்பவர், பின் ஏன் மாரடைப்பு? : கங்குலிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பேட்டி

இந்தப் பிரச்சினை இந்தியர்கள் பலருக்கு அவர்களது வாழ்நாளில் ஒரு கட்டத்தில் ஏற்படும்.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இல்லை, சீரான உடற்பயிற்சி மேற்கொள்பவர், பின் ஏன் மாரடைப்பு? : கங்குலிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பேட்டி
மாரடைப்பு ஏன்? கங்குலி மருத்துவர் விளக்கம்.
  • Share this:
சவுரவ் கங்குலிக்கு வயது 48தான் ஆகிறது, அவருக்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இல்லை, நல்ல உடற்பயிற்சி செய்பவர், உடற்தகுதி உடையவர், அவருக்கு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது ? என்பதே பலருக்கும் ஏற்படும் ஐயமாகும். பொதுவாக மாரடைப்புக்கு லைஃப் ஸ்டைல் தான் காரணம் என்று கூறப்படுவதுண்டு.

நல்ல உடற்தகுதி உடையவர், வேறு உபாதைகள் இல்லாதவர் கங்குலி அவருக்கு எப்படி மாரடைப்பு ஏற்படும்? நாம் என்னதான் பிரமாதமான லைஃப் ஸ்டைலில் வாழ்ந்து கொண்டு கண்டிப்பான பழக்க வழக்கங்களை கறராகக் கடைப்பிடித்தாலும் இந்தியர்களின் நிலை இதுதான். நாம் என்ன பெரிய தடகள வீரராக இருந்தாலும் சரி, தினப்படி உடற்பயிற்சி செய்பவராக இருந்தாலும் சரி நாம் தடுப்பு செக்-அப்களை சீரான இடைவெளியில் மேற்கொள்ளவில்லை என்றால் நமக்கும் மாரடைப்பு வரும் என்கிறார் கங்குலிக்கு மருத்துவம் பார்த்த குழுவில் இருக்கும் டாக்டர் தேவி ஷெட்டி.

கடந்த சனிக்கிழமையன்று கங்குலிக்கு மார்வலி ஏற்பட்டு கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு பரிசோதனையில் அவருக்கு, இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் வால்வ்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி எனும் சிகிச்சை அளித்து அவர் குணமடைந்து விட்டார். இது வேறு விஷயம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு விளையாட்டு வீரருக்கு எப்படி மாரடைப்பு வரும்? என்ன கோளாறு? என்பதே பலரது கேள்வியாக இருந்து வருகிறது.


இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்குமாறும் டாக்டர் தேவி ஷெட்டி விளக்கம் அளித்தார்.

“இந்தப் பிரச்சினை இந்தியர்கள் பலருக்கு அவர்களது வாழ்நாளில் ஒரு கட்டத்தில் ஏற்படும். இருதய ரத்தக் குழாயில் அடைப்பு. அவருக்கு இருதயம் சேதம் அடைந்திருந்ததா? இல்லை. அடைப்பு இருந்தது அவருக்கு அது சிரமத்தை அளிக்க அவர் சரியான நேரத்தில் சரியான மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு கங்குலியி இதயம் 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைப் போல் வலுவாக இருக்கிறது.

கங்குலியே கூறுவது போல், நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, உடற்தகுதியுடன் இருந்தாலும் சரி முன் கூட்டியே தடுக்குமாறு செக்-அப் அல்லது சீரான கால இடைவெளியில் உடற்பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஏனெனில் இப்படிப்பட்ட ஒன்று நம்மை சோதிக்காமல் விடாது.சவுரவ் கங்குலிக்கு ஏற்பட்ட மாரடைப்பு உலகை உலுக்கி விட்டது. 48 வயதுதான் ஆகிறது, கங்குலி போன்ற விளையாட்டு வீரர், ரெகுலராக உடற்பயிற்சி செய்பவர், கெட்டப்பழக்கம் இல்லாதவருக்கு எப்படி மாரடைப்பு உருவானது என்பதே பலரது கேள்வி, இதுதான் இந்தியாவின் உண்மையான எதார்த்த நிலை. நாம் எவ்வளவுதான் நம் பழக்க வழக்கங்களில் கண்டிப்பான நடைமுறைகளை வைத்துக் கொண்டாலும் லைஃப் ஸ்டைலை கறாராக வைத்துக் கொண்டாலும் உடற்பயிற்சி செய்தாலும் நமக்கும் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்க ஒரே வழி சீரான இடைவெளியில் தடுப்பு மருத்துவ சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

கங்குலி இப்போது பெற்ற சிகிச்சை இனி அவருக்கு அளிக்கப்போகும் சிகிச்சை மற்றவர்களைப் போல் அவரும் சகஜமான இயல்பான வாழ்க்கையை வாழ் உதவும். இந்த ஒரு மாரடைப்பு சம்பவம் அவரது ஆயுளையோ, லைஃப் ஸ்டைலையோ பாதிக்கப்போவதில்லை.

கங்குலிக்கு இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை யாரோ ஒரு டாக்டரால் அறிவுறுத்தப்பட்டதல்ல, டாக்டர்கள் குழுவில் இருக்கும் அனைவரும் சேர்ந்த எடுத்த கூட்டு முடிவு. இவரக்ள் அனைவரும் 20-30 ஆண்டுகளாக இருதய சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். எனவே உலகில் கிடைக்கும் சிறந்த சிகிச்சை அவருக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார் டாக்டர் தேவி ஷெட்டி.
First published: January 8, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading