தேர்தல் ஆணைய தூதராக இருந்தும் டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

Why #Karnataka #ElectionCommission brand ambassador #RahulDravid cannot vote | வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு விளம்பரங்களிலும் டிராவிட் நடித்துள்ளார்.

news18
Updated: April 14, 2019, 7:54 PM IST
தேர்தல் ஆணைய தூதராக இருந்தும் டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!
ராகுல் டிராவிட்.
news18
Updated: April 14, 2019, 7:54 PM IST
கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தின் தூதரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தின் தூதராக இருக்கிறார். இவர், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என மக்களைக் கேட்டுகொண்டுள்ளார். அத்துடன் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

Rahul Dravid, ராகுல் டிராவிட்
தேர்தல் ஆணைய விளம்பரத்தில் டிராவிட்.இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை அளிக்கக்கோரிய அவரே வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மத்திய பெங்களூரு தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகரில் வசித்து வந்தார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆர்.எம்.வி தொகுதிக்கு உட்பட்ட அஸ்வந்த் நகர் பகுதிக்கு அவர் மாறினார்.

இந்திரா நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்படுவதற்கான ஆவணங்கள் டிராவிட்டின் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆர்.எம்.வி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர் பெயரைச் சேர்ப்பதற்கான ஆவணங்களை அவர்கள் சமர்பிக்கவில்லை என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rahul Dravid, ராகுல் டிராவிட்
கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தின் தூதர் ராகுல் டிராவிட்.


Loading...

வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து டிராவிட்டின் பெயர் நீக்கப்பட்டதால், இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத் தூதரே வாக்களிக்க முடியாதது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO | பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் கோலியைக் கட்டியணைத்த ரசிகர்!

VIDEO | தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சி.எஸ்.கே வீரர்கள்... வைரலாகும் வீடியோ!

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

தோனிக்கு 3 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும்: சேவாக்

அப்போ சுரேஷ் ரெய்னா, இப்போ கிறிஸ் கெயில்

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி! முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...