உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் ஏன் இல்லை? பாலிவுட் நடிகர் கேள்வி!

Why is #RishabhPant not in #WorldCup squad? - #RishiKapoor asks #RaviShastri, #ViratKohli | எலிமினேட்டர் போட்டியில் ரிஷப் பண்ட் 21 பந்துகளில் 49 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் ஏன் இல்லை? பாலிவுட் நடிகர் கேள்வி!
Why is #RishabhPant not in #WorldCup squad? - #RishiKapoor asks #RaviShastri, #ViratKohli | எலிமினேட்டர் போட்டியில் ரிஷப் பண்ட் 21 பந்துகளில் 49 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
  • Share this:
உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஏன் இல்லை என ரவி சாஸ்தி மற்றும் கோலியிடம் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


இதனை அடுத்து, விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.



பரபரப்பான போட்டியில் டெல்லி அணியில் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 21 பந்துகளில் 49 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட் ஏன் இல்லை என ரவி சாஸ்தி மற்றும் கோலியிடம் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.



உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், தோனி உடன் 2-வது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் இடம்பெற்றதால், ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading