சென்னை டெஸ்ட் போட்டியில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடிய இங்கிலாந்து வீரர்கள்... ஏன் தெரியுமா?

கறுப்பு பட்டை அணிந்து விளையாடிய இங்கிலாந்து வீரர்கள்

India vs England | சர் டாம் மூரின் நினைவாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து உள்ளனர்.

 • Share this:
  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

  இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். பிரிட்டிஷ் ராணுவத்தின் முன்னாள் கேப்டனும், கொரோனா தொற்றுக்கு எதிரான போராடட்டத்தில் முக்கிய பங்கு வகித்த சர் டாம் மூரின் நினைவாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முர்ரே இந்த வாரம் தனது நூறு வயதில் இறந்தார். 100 வயதில் கூட, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மூர் முக்கிய பங்கு வகித்தார்.

  சர் டாம் மூர் 1920 இல் யார்க்ஷயரில் உள்ள கிக்லி என்ற கிராமத்தில் பிறந்தார். வெறும் 20 வயதில், அவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தார். மூர் இந்தியாவிலும் பர்மாவிலும் இராணுவ சேவையில் பணியாற்றினார், இரண்டாம் உலகப் போரின்போது வெலிங்டன் ரெஜிமென்ட் டியூக்கின் எட்டாவது பட்டாலியனில் சேர்ந்தார். அவர் 1945 இன் ஆரம்பத்தில் பிரிட்டனுக்குத் திரும்புவதற்கு முன்பு பர்மாவில் (இப்போது மியான்மர்) ஒரு ஜப்பானிய இராணுவப் போரில் ஈடுபட்டிருந்தார். 1946 இல் வெறும் 26 வயதில் இராணுவ பயிற்றுவிப்பாளராக ஆனார்.

  கொரோனாவிற்கு எதிரான போிலும் சர் மூர்ரே சிறப்பாக பங்காற்றிய அவர் நிதி திரட்டும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். கொரோனா தொற்றை சமாளிக்க 32 மில்லியன் யூரோக்கள் (சுமார் 286 கோடி) நிதி திரட்டி, அந்த பணத்தைபிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கு ஒப்படைத்தார் என்பது குறிப்பிடதக்கது.
  Published by:Vijay R
  First published: