• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலி, ரோஹித் சர்மா ரசிகர்களிடையே மோதல்கள் ஏன்? ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் கேள்வியால் சர்ச்சை

விராட் கோலி, ரோஹித் சர்மா ரசிகர்களிடையே மோதல்கள் ஏன்? ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் கேள்வியால் சர்ச்சை

ரோஹித் ஷர்மா, வீரட் கோலி.

ரோஹித் ஷர்மா, வீரட் கோலி.

விராட்கோலி ரசிகர்கள் ரோஹித் சர்மாவையும், ரோஹித் ரசிகர்கள் கோலியையும் வெறுக்கும் அளவுக்கு பதிவுகளை இணையத்தில் பகிர்கின்றனர்.

  • Share this:
இந்திய கேப்டன் விராட் கோலி, ஹிட்மேன் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய பேட்டிங் வரிசையின் தற்போதைய தூண்களாக இருப்பதை நாம் அறிவோம். இருவரும் இந்தியாவை புகழ்பெறச் செய்தவர்கள். இருவருக்கும் இடையில் ஒப்பீடுகள் செய்யப்படுது வழக்கம். ஐபிஎல் போட்டியில் மட்டும் இவ்விரு வீரர்களும் போட்டியாளர்களாக மாறுகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் கேப்டனாக தலைமை தாங்கினர்.

ஐபிஎல் போட்டிகளில் சாதாரணமாகவே ஒவ்வொரு அணியின் ரசிகர்களும் அவர்களின் அணிக்கு ஆதரவாகவும் மற்ற அணிகளைக் கலாய்த்தும் மீம்ஸ்களைப் பதிவிடுவர். ஆனால், விராட்கோலி ரசிகர்கள் ரோஹித் சர்மாவையும், ரோஹித் ரசிகர்கள் கோலியையும் வெறுக்கும் அளவுக்கு பதிவுகளை இணையத்தில் பதிவர். அப்படி ஒரே அணியைச் சேர்ந்த இரு கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்கள் ஏன் ஒருவருக்கொருவர் வெறுக்கிறார்கள் என்பதை அறிய ஆர்வமாக இருந்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் சோலி அமண்டா பெய்லி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தக் கேள்வியை ரசிகர்களிடம் நேரடியாகவே கேட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ரசிகர்கள் ஏன் ஒருவருக்கொருவர் இப்படி வெறுப்பைக் காட்டுகிறார்கள்? இருவருமே இந்திய அணியினர் தானே? எனக்கு விளக்கம் தேவை" எனப் பதிவிட்டிருந்தார். அதனுடன், பாலிவுட் நடிகர் நசீருத்தீன் ஷா 'குணா ஹை யே' (இது ஒரு குற்றமா) என்று கூறுவதுபோல் ஒரு மீம்சையும் பதிந்தார்.


அவரின் ட்விட்டர் பதிவால் இரு வீரர்களின் ரசிகர்களும் மீண்டும் ஒரு போரைத் தொடங்கியுள்ளனர். மேலும், அவர்கள் கோலி மற்றும் ரோஹித் குறித்து பல்வேறு கருத்துகளையும் மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.







விராட் கோலி ஒரு கட்டத்தில் ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தேவுடன் டேட்டிங் செய்தார் என்ற வதந்தியும் வந்தது. பின்னர், ரித்திகா சஜ்தே என்பவர் கோலியின் மேனேஜர் என்பதும் கடந்த 2013ம் ஆண்டு வெளியான புகைப்படம் மூலம் தெளிவானது குறிப்பிடத்தக்கது. என்னதான் ரசிகர்களிடையே போட்டி மனப்பான்மை இருந்தாலும், இரு வீரர்களிடையே அது அதிகம் இல்லை. கடந்த 2017ம் ஆண்டு முதல் 'பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்' (Breakfast With Champions) நேர்காணலில் பங்கேற்ற கோலி இதுகுறித்தும் பேசியுள்ளார்.

ஆரம்பத்தில் ரோஹித் சர்மா பேச்சால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கோலி குறிப்பிட்டிருந்தார். "நானும் ஒரு இளம் வீரர், புதிய பையன் என்பதால் எல்லோருக்கும் நான் மிகைப்படுத்தப்பட்டேன்" எனக் கூறியிருந்தார். T -20 உலகக் கோப்பை நடந்தபோது ரோஹித் ஷர்மாவின் பேட்டிங்கை புகழ்ந்து பேசினார் கோலி. "இது ஆச்சரியமாக இருக்கிறது, பேட்டிங் செய்வதில் அவரைவிட சிறப்பாக விளையாடிய யாரையும் நான் பார்த்ததில்லை" என கோலி புகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: