ரிஷப் வேண்டாம்... தினேஷ் கார்த்திக் ஓ.கே... எதன் அடிப்படையில் தேர்வு?

Why #DineshKarthik is including 2019 #WorldCup #IndianSquad Not #RishabhPant | உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரிஷப் வேண்டாம்... தினேஷ் கார்த்திக் ஓ.கே... எதன் அடிப்படையில் தேர்வு?
ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக்.
  • News18
  • Last Updated: April 15, 2019, 4:56 PM IST
  • Share this:
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படமால், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டதற்கு சில காரணங்கள் உள்ளன.

12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தேர்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கடும் ஆலோசனைகளுக்குப் பிறகு கூட்டத்தின் முடிவில், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Indian Team Squad WC
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)


அந்த அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படாமல், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டது ஏன் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அண்மையில் நடந்த வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக விளாடினார். அவர் அதிரடியாக விளையாடி போட்டியை வெற்றியுடன் முடித்துக்கொடுக்கும் திறமை கொண்டவர்.ஆனால், இந்திய கிரிக்கெட் அணியில் தோனி இடம்பெறுவதற்கு முன்பாகவே இடம்பெற்றவர் தினேஷ் கார்த்திக். ஒரு நாள் போட்டிகளில் நிறைய அனுபவம் கொண்டவர்.

இக்கட்ட சூழலில் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கக்கூடியவர். மிடில் ஆர்டர் அணியில் நிலையைக் கருத்தில்கொண்டு பொறுமையாக விளையாடும் வீரர் தேவைப்படுகிறது.

இறுதியாக, ரிஷப் பண்ட் இளம் வீரர் என்பதால், அவருக்கு இனி நிறைய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனால், தினேஷ் கார்த்திக் வயது 33 ஆகிவிட்டது. இனிமேல், அவர் இந்திய அணிக்காக எவ்வளவு நாட்கள் விளையாடுவார் என்பது தெரியவில்லை. இதுபோன்ற மிகப்பெரிய ஆலோசனைக்குப் பிறகே அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

#BREAKING | உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 2 வீரர்கள்... தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி...!இணைபிரியா நட்பென்றால் இப்படி இருக்கனும்... ஒரே தட்டில் சாப்பிட்ட தோனி - ஜாதவ்!

உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

ஒற்றை இலக்க ரன்களில் சுருண்ட வீரர்கள்! டெல்லி அணியிடம் தோற்ற ஹைதராபாத்
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading