Home /News /sports /

Ind vs SA | 2-வது டெஸ்டில் கோலி ஏன் விளையாடவில்லை? கேப்டன் கே.எல்.ராகுல் பதில்

Ind vs SA | 2-வது டெஸ்டில் கோலி ஏன் விளையாடவில்லை? கேப்டன் கே.எல்.ராகுல் பதில்

விராட் கோலி

விராட் கோலி

Virat Kohli | தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெறவில்லை. இதனால் கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். டாஸ்க்கு பின் பேசிய கே.எல்.ராகுல் விராட் கோலி முதுகு பிடிப்பு காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    விராட் கோலி உடல்நலம் பெற்று கட்டாயம் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். விராட் கோலிக்கு பதிலாக ஹனுன விஹாரி அணியில் இடம் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கேப்டன் எல்கர் தெரிவித்தார். டி-காக் மற்றும் மல்டர் இருவருக்கு பதிலாக கைல் வெர்ரியன், டுவான் ஆலிவியர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய அணி : கே.எல்.ராகுல்(C), மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த்(W), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

    தென்னாப்பிரிக்கா அணி : டீன் எல்கர்(c), ஐடன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா, கைல் வெர்ரேய்ன்(w), மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், டுவான் ஆலிவியர், லுங்கி நிகிடி
    Published by:Vijay R
    First published:

    Tags: India vs South Africa, Virat Kohli

    அடுத்த செய்தி