இதென்ன கலாட்டா! நாய்க்கு ஐசிசி விருது: விநோத அறிவிப்பின் பின்னணி

பரிசு பெற்ற நாய்.

ஐசிசி என்கிற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருதோடு மாதத்தின் சிறந்த நாய் என்ற ஒரு விருதையும் ஆகஸ்ட்டில் சேர்த்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 • Cricketnext
 • Last Updated :
 • Share this:
  ஐசிசி என்கிற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருதோடு மாதத்தின் சிறந்த நாய் என்ற ஒரு விருதையும் ஆகஸ்ட்டில் சேர்த்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

  ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட மகளிர் கிரிக்கெட்டில் அயர்லாந்தின் ஈமியர் ரிச்சர்ட்சன் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் இவர்களோடு புதிதாக ஒரு ஜீவனும் ஆகஸ்டின் சிறந்த விருதை பெற்றது. அனைத்து அயர்லாந்து டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் மைதானத்திற்குள் ஓடிவந்த நாய்க்கும் சிறந்த நாய் விருது அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போட்டியின் போது இந்த நாயின் பீல்டிங் முயற்சியை பாராட்டி இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.

  மேலும் அயர்லாந்து கிரிக்கெட்டில் இந்த நாய்தான் சிறந்த பீல்டர் என்று வர்ணிக்கப்பட்டது. மேலும் பிளேயர் ஆஃப் த மொமண்ட் விருதையும் இந்த நாய் தட்டிச் சென்றது. ஐசிசி இந்த வணக்கத்துக்குரிய நாயின் போட்டோவை தன் அதிகார பூர்வ ட்விட்டர் கைப்பிடியிலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. இந்த மாதம் விருது கூடுதல் வீரருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஐசிசி தற்பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது.  மேலும் நாயின் அசாத்தியமான ஓடும் திறன் என்று குறிப்பிட்டு ஐசிசி விதந்தோதியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. பந்தை உண்மையில் அந்த நாய் பீல்டிங் செய்து அதிசயிக்க வைத்தது.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: