சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கூல் கேப்டன் தோனி இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கூல் கேப்டன் தோனி இல்லை. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக அவர் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணியின் கேப்டன் தோனி கடைசியாக நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக விளையாடும் போது தசைப்பிடிப்பு காரணமாக மிகவும் சிரமப்பட்டார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோனி அரைசதம் அடித்தாலும் தசைபிடிப்பு காரணமாக தோனி மிகவும் அவதிப்பட்டார்.
VIDEO | வைரலாகும் ஸிவா தோனியின் புதிய வீடியோ!

எம்.எஸ்.தோனி. (BCCI)
இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் தோனி இடம் பெற்றுள்ளார். உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரில் முக்கிய போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டுமென பிசிசிஐ தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயம் காரணமாக எந்த ஒரு முக்கிய வீரரும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகாமல் இருக்கவே இதற்கு முக்கிய காரணம்.
மகேந்திர சிங் தோனி தற்போது 37 வயதில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் எந்த வித சிக்கலும் இல்லாமல் இருக்கவே தோனி இன்றைய போட்டியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்தப் போட்டியிலும் தோனி விளையாடுவாரா அல்லது ஓய்வில் இருப்பாரா என்பதும் கேள்வி குறியாகவே உள்ளது. சென்னை அணி தற்போது 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி ஃப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். தோல்வி அடைந்தாலும் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலியே இருக்கும், அதில் எந்த மாற்றமும் இருக்காது.
READ: ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.