ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் சுயிங் கம்மை ஏன் மெல்லுகிறார்கள் தெரியுமா?

மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் சுயிங் கம்மை ஏன் மெல்லுகிறார்கள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Cricketers Chew Gum | கபில்தேவ் முதல் விராட் கோலி வரை பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் இப்படி செய்வதை நாம் பார்த்திருக்கின்றோம். ஏன் இப்படி கிரிக்கெட் மைதானத்தில் சுயிங் கம் சாப்பிடுகிறார்கள் என்று தெரியுமா?

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கிரிக்கெட் பற்றிய பல்வேறு தகவல்களை நீங்கள் நுனி விரலில் வைத்திருக்கலாம். ஆனால் நீங்கள் அறிந்திராத கிரிக்கெட் தொடர்பான இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்கள் பல இடங்களில் ஒளிந்துள்ளன. உதாரணமாக, கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் இருக்கும்போது சுயிங் கம் ஏன் மெல்கின்றனர் போன்ற கேள்விகளுக்கு பலருக்கும் பதில் தெரியாது. எந்த ஒரு உண்மையான கிரிக்கெட் ஆர்வலரும் தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் மைதானத்தில் இருக்கும் போது, அவர் சூயிங்கம் சாப்பிடுவதை பார்த்திருக்க முடியும்.

கபில்தேவ் முதல் விராட் கோலி வரை பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் இப்படி செய்வதை நாம் பார்த்திருக்கின்றோம். ஏன் இப்படி கிரிக்கெட் மைதானத்தில் சுயிங் கம் சாப்பிடுகிறார்கள் என்று தெரியுமா? இந்த நடைமுறைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

நிதானம் மற்றும் மன அமைதி: சூயிங் கம் சாப்பிடுவது  கிரிக்கெட் வீரர்களை அதிக மனஅழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்து அமைதியாக வைத்திருக்க உதவும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 140 கிமீ வேகத்தில் வீசும் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கேட்சுக்காக காத்திருக்கும் பீல்டராக இருந்தாலும் சரி, கிரிக்கெட் என்பது ஒருவர் நிதானமாகவும் மன அமைதியுடனும் இருக்க வேண்டிய விளையாட்டு ஆகும்.

ஹைட்ரேஷன்

இந்தியா போன்ற வெப்பமான காலநிலையை கொண்ட நாடுகளில் அதிக நேரம் மைதானத்தில் நிற்பதால் நீரிழப்பு ஏற்படும். எனவே, சூயிங் கம் மெல்லுவதால் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க செய்கிறது. இது உடலில் உள்ள நீரின் அளவை அதிகரிக்காது என்றாலும், அதை மென்று உமிழ்நீரை அதிகமாக வெளியேற்றி, வழக்கத்தை விட தாகத்தை உண்டாக்கும். இதன் விளைவாக, வீரர் அதிக தண்ணீர் குடிக்க வழி செய்கிறது.

Also Read... காமன்வெல்த் அணியிலிருந்து நீக்கம்: ‘ஹை ஜம்ப்’ வீரர் தேஜஸ்வின் சங்கர் வழக்கு

புத்தி கூர்மை

கிரிக்கெட் போட்டிகள் மிக நீண்ட நேரம் விளையாட கூடிய விளையாட்டாகும். எனவே இதனால் ஒருவர் தனது கவனத்தை எளிதில் இழக்க நேரிடும். நீண்ட நேரம் எதையும் செய்யும்போது, ​​யாராக இருந்தாலும் கவனத்தை இழக்கத்தான் செய்வார்கள். இங்கு தான் சூயிங் கம் வேலை செய்கிறது. ஆம், சூயிங் கம் மெல்லுவதால் புத்தி கூர்மை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், இது பீல்டர்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும்.

செயல்படும் நேரம்

சூயிங் கம் சாப்பிடுவதால் இது உங்கள் அனிச்சை வேகத்தில் நேர்மறையான விளைவைக் கூட ஏற்படுத்தும். சூயிங் கம் மெல்லுவதால் அது மூளையை விழிப்பாக வைத்திருக்க செய்கிறது மற்றும் உடலில் உள்ள மற்ற பகுதிகளை நரம்பு மண்டலத்தின் உதவியோடு விரைவாக செய்திகளை அனுப்ப வழி செய்கிறது என்று ஒரு அறிவியல் ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது.

எனர்ஜி

சூயிங் கம்மில் உள்ள குளுக்கோஸ் ஒரு சிறந்த புத்துணர்ச்சியூட்டியாக வேலை செய்யும். மேலும் இதனால் கிரிக்கெட் வீரர்கள் ஆற்றல் குறைவாக இருக்கும்போதும் அதை சமாளிக்க இது உதவுகிறது. மேற்சொன்ன காரணங்களால் தான், கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் சூயிங் கம் மெல்லுகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Chewing gum, Cricket