ஐபிஎல் ஏலத்தில் இதுவரை இல்லாத தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டரும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரருமான கிறிஸ் மோரிஸ் அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
என்ன காரணமாக இருக்கும் என்று அனைவரும் குழம்பியுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவின் உள்நாட்டு அணியான டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார் .
கிறிஸ் மோரிஸ் தென் ஆப்பிரிக்காவுக்காக 2019 உலகக்கோப்பையில் ஆடினார். இந்தத் தொடரில் அவர் தென் ஆப்பிரிக்காவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ஆனார். 3 வடிவங்களிலும் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆடி 94 விக்கெட்டுகளை எடுத்தார் கிறிஸ் மோரிஸ்.
பந்து வீச்சில் மணிக்கு 140 கிமீ வேகம் வீசக்கூடியவர். பின்வரிசையில் இறங்கி ஹார்டு ஹிட்டிங் பேட்டராக வெளுத்து வாங்கக்கூடியவர். டிசம்பர் 2012-ல் டி20 சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் அறிமுகமானார். அடுத்த ஆண்டே ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அறிமுகமானார். ஜனவரி 2016-ல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானவர் 4 டெஸ்ட் போட்டிகளையே ஆட முடிந்தது. தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிரான உறுதியான நடவடிக்கை காரணமாக தென் ஆப்பிரிக்க அணியில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கருப்பரின வீரர்கள் ஆடுவது கொள்கையாக்கப்பட்டது, அதில் இவர் இன்னும் சில வீரர்கள் அணியில் வாய்ப்புக் கிடைக்காமல் சென்றனர்.
ஒருமுறை சிஎஸ்கே அணி இவரது அடிப்படை விலை 20,000 டாலர்களை விடவும் 31 மடங்கு அதிகவிலை கொடுத்து 6,25,000 டாலர்களுக்கு வாங்கியது ஒரேயொரு போட்டியில்தான் ஆடினார். ஐபிஎல் 2016 ஏலத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் இவரை ரூ.7 கோடிக்கு வாங்கியது. 2020 ஏலத்தில் ஆர்சிபி அணி இவருக்காக ரூ.10 கோடி கொடுக்க முன்வந்தது. கடைசியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடி தொகைக்கு ஏலம் எடுத்தது. இன்று வரை ஒரு வீரருக்கு அதிகவிலை கொடுக்கப்பட்டது இவருக்குத்தான்.
மொத்தமாக அனைத்து டி20களிலும் 234 போட்டிகளில் ஆடி 290 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். பேட்டிங்கில் 150% ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இந்நிலையில் கோச்சிங் ரோலுக்காக தன் பெரிய விலைகளையும் விட்டுக் கொடுத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் கிறிஸ் மோரிஸ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2021, IPL 2022, IPL Auction