தோனி, உள்நாட்டுப் போட்டியில் ஆடமாட்டாரா?: கவாஸ்கர் காட்டமான கேள்வி

Why are #MSDhoni, #Dhawan not playing domestic cricket?: #SunilGavaskar | கடைசியாக நவம்பர் 1-ம் தேதி விளையாடிய தோனி, ஜனவரில் விளையாடப்போவது மிகப்பெரிய இடைவெளி என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

news18
Updated: December 4, 2018, 7:43 PM IST
தோனி, உள்நாட்டுப் போட்டியில் ஆடமாட்டாரா?: கவாஸ்கர் காட்டமான கேள்வி
சுனில் கவாஸ்கர் & தோனி
news18
Updated: December 4, 2018, 7:43 PM IST
தோனியும், தவானும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார்களா என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கான இடம் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். தற்போது, டி-20 அணியில் இருந்தும் தோனி கழற்றிவிடப்பட்டார்.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரில் தோனி சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. இதோடு, 2019 ஜனவரி மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில்தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், டெஸ்ட் தொடரில் ஷிகர் தவானுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Dhoni Play Tennis
டென்னிஸ் விளையாடும் தோனி (Twitter)


தோனி, தனது சொந்த ஊரான ராஞ்சியிலும், தவான் மெல்போர்னிலும் தனது குடும்பத்துடன் ஓய்வு நேரத்தை கழித்து வருகின்றனர்.

Shikar Dhawan's Child
குழந்தை உடன் ஷிகர் தவான் (Twitter)


தோனி, தவான் ஓய்வு குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், “தோனி மற்றும் தவான் ஏன் உள்ளூர் அணிகளில் விளையாடக்கூடாது? சர்வதேச போட்டிகளில் விளையாடாத நேரங்களில் அவர்களை உள்ளூர் அணிகளுக்கு கேப்டனாக நியமினம் செய்யுங்கள் என பிசிசிஐ மற்றும் அணித் தேர்வாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். தோனி, கடைசியாக நவம்பர் 1-ம் தேதி விளையாடினார். அடுத்து ஜனவரியில்தான் விளையாடவுள்ளார். இது நீண்ட இடைவெளி” என்று கூறினார்.
Loading...
“ஆஸ்திரேலிய தொடரிலும், அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடரிலும் தோனி சிறப்பாக விளையாடவில்லை என்றால், உலகக் கோப்பையில் அவருக்கான வாய்ப்பு கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்” என்று கவாஸ்கர் குறிப்பிட்டார். இவரின் கருத்தால் தோனி, தவான் இருவருக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க...

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்