தோனி குறித்து ஐசிசி வெளியிட்ட 3 நிமிட வீடியோவால் ரசிகர்கள் குழப்பம்!

ICC World Cup 2019 | Mahendra Singh Dhoni | 37 வயதான மகேந்திரசிங் தோனி நாளை தனது 38வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

தோனி குறித்து ஐசிசி வெளியிட்ட 3 நிமிட வீடியோவால் ரசிகர்கள் குழப்பம்!
மகேந்திர சிங் தோனி
  • News18
  • Last Updated: July 6, 2019, 4:47 PM IST
  • Share this:
தோனியை பெருமைப்படுத்தும் விதமாக ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து டிராவிட் விலகிய பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற மகேந்திர சிங் தோனி அணியை மிகப்பெரிய உச்சத்திற்கு கொண்டு சேர்த்தார்.

தோனியின் தலைமையில் தான் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன் டிராபி வென்று அசத்தியது. இந்திய அணியை டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னறியதும் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்த போது தான்.


வெளிநாடுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வியடைந்ததால் விமர்சனத்துக்குள்ளான தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார். கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும் அணியின்  சக வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவது, ஃபில்டிங் மாற்றம் செய்து அணியை வழிநடத்தி வருகிறார் தோனி.

MS Dhoni, தோனி

உலகக் கோப்பை தொடரில் தற்போது விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி விரைவில் ஓய்வு அறிவிப்பார் என அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஐசிசி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.


அந்த வீடியோவில் தோனி எப்படி அணியை வழிநடத்தினார், அவரின் சாதனைகள் என்ன என்பதை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளது. மேலும் உலகின் முன்னணி வீரர்கள் தோனி குறித்த தங்கள் கருத்துகளை அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

37 வயதான மகேந்திரசிங் தோனி நாளை தனது 38-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஐசிசி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதா? அல்லது விரைவில் அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட உள்ளாரா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் பலரும் அவர் பிறந்தநாளை முன்னிட்டு தான் ஐசிசி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Watch

First published: July 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading