முகப்பு /செய்தி /விளையாட்டு / #EngvNz | இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து! வெற்றி வாய்ப்பு யாருக்கு?

#EngvNz | இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து! வெற்றி வாய்ப்பு யாருக்கு?

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி

England vs New zealand | இரு அணிகளுமே இதுவரை சாம்பியன் கோப்பையை முத்தமிட்டதில்லை. எனவே, கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து 27 ஆண்டுகளுக்குப் பின், இறுதிக்குள் நுழைந்துள்ளதால் சொந்த மண்ணில் சாதிக்கும் நோக்கில் உள்ளது.

  • Last Updated :

உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் புதிய சாம்பியன் யார் என்பதை நிரூபிக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இங்கிலாந்தில் ஒன்றரை மாதமாக நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதில், முதல் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து வெற்றிபெற்றது. 2-வது அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வெளியேற்றியது.

சாம்பியன் பட்டத்திற்கான இறுதியாட்டத்தில் ஒருநாள் தரவரிசையில் நம்பர் ஒன் அணியான இங்கிலாந்து, மூன்றாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இப்போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை, ஜேசன் ராய், ஜோ ரூட், இயான் மோர்கன், பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் என பேட்டிங் பட்டாளமே உள்ளது. பந்துவீச்சில் ஆர்ச்சர், மார்க்-வுட், பிளங்கட், அடில் ரஷித் என எதிரணியை மிரட்டக்கூடியவர்கள் உள்ளனர்.

நியூசிலாந்து அணியில், கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், மார்டின் கப்தில், நிகோலஸ், நீஷம், கிராண்ட்ஹோம் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

பந்துவீச்சைப் பொறுத்தவரை, ஃபெர்குசன், டிரென்ட் போல்ட், மட் ஹென்றி, சான்ட்னர் நம்பிக்கை அளிக்கின்றனர். எனவே, பந்துவீச்சாளர்கள் அசத்தினால்தான் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியும்.

இங்கிலாந்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. முன்னதாக, 1979, 87, 92 ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடமே பிடித்தது.

அதே வேளையில், தொடர்ந்து 2-வது முறையாக இறுதி வாய்ப்பை எட்டிப் பிடித்துள்ளது நியூசிலாந்து. 2015 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

இரு அணிகளுமே இதுவரை சாம்பியன் கோப்பையை முத்தமிட்டதில்லை. எனவே, கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து 27 ஆண்டுகளுக்குப் பின், இறுதிக்குள் நுழைந்துள்ளதால் சொந்த மண்ணில் சாதிக்கும் நோக்கில் உள்ளது.

மேலும், நியூசிலாந்தும் முதல் முறை பட்டம் வெல்ல போராடும் என்பதால், உலகக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத ஓர் யுத்தமாக இறுதிப் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால், உலகக் கோப்பையில் மகுடம் சூடப் போகும் புதிய அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also watch: வருடம் முழுவதும் சம்பாதிக்கணும்னா? அடுக்கு முறை விவசாயம் பண்ணலாம்... எப்படி செய்வது?

top videos

    First published:

    Tags: ICC Cricket World Cup 2019