பஞ்சாப்பை பஞ்சர் ஆக்குமா சி.எஸ்.கே..? யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

Who will win #CSKvsKXIP, #IPL Match Today Prediction? | மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சி.எஸ்.கே உள்ளது.

பஞ்சாப்பை பஞ்சர் ஆக்குமா சி.எஸ்.கே..? யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
தோனி - அஸ்வின். (BCCI)
  • News18
  • Last Updated: April 6, 2019, 1:07 PM IST
  • Share this:
சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் 18-வது லீக் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

ஹாட்ரிக் வெற்றி பெற்ற சி.எஸ்.கே அணி, மும்பைக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சி.எஸ்.கே உள்ளது. அதேபோல், பஞ்சாப் அணி கடந்த 2-வது போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், கடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.


Chennai Super Kings, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)


புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் பஞ்சாப் அணியும், 4-வது இடத்தில் சென்னை அணியும் உள்ளது.

யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?1. இரு அணிகளும் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், சென்னை அணி 11 முறையும், பஞ்சாப் அணி 8 முறையும் வென்றுள்ளது. வெற்றி விகிதம் சென்னைக்கு சாதகமாக இருக்கிறது.

2. சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை, பஞ்சாப் அணியை 5 முறை சென்னை அணி வீழ்த்தியுள்ளது. அதேபோல், பஞ்சாப் அணியும் 2 முறை வென்றுள்ளது.

3. சென்னையைச் சேர்ந்த அஸ்வினுக்கு சேப்பாக்கம் மைதானத்தைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அதனால் தோனிக்கு சவால் அளிக்கும் முறைகளை அவர் கையால வாய்ப்புள்ளது.

4. பஞ்சாப் அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா அதிக ரன்கள் அடித்தவராக இருக்கிறார். அவர் 641 ரன்கள் அடித்துள்ளார். பஞ்சாப் சார்பில் டேவிட் மில்லர் 269 ரன்கள் அடித்துள்ளார்.

5. பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக பிராவோ இருக்கிறார். 14 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள அவர் காயம் காரணமாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார்.

6. டி-20 கிரிக்கெட் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்லை 7 முறை பிராவோ வீழ்த்தியுள்னார்.

Chepauk Cricket Ground
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்.


சேப்பாக்கம் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?

நடப்பு சீசனில் நடந்த 2 போட்டிகளை ஒப்பிட்டு பார்த்தால் சேப்பாக்கம் மைதானம் வித்தியாசமான முடிவுகளை காட்டுகிறது. முதலில் நடந்த சென்னை - பெங்களூரு இடையிலான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர்கள் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

2-வதாக நடந்த சென்னை - ராஜஸ்தான் இடையிலான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் 11 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர்கள் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஐ.பி.எல் பரிதாபங்கள்... பவுலர்கள் இல்லாமல் தவிக்கும் சி.எஸ்.கே!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்