ENGvNZ | நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு... மழையினால் போட்டி தொடங்குவதில் தாமதம்
ENGvNZ | நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு... மழையினால் போட்டி தொடங்குவதில் தாமதம்
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி
ICC World Cup 2019 Final | England v New Zealand | இரு அணிகளுமே இதுவரை சாம்பியன் கோப்பையை முத்தமிட்டதில்லை. எனவே, கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து 27 ஆண்டுகளுக்குப் பின், இறுதிக்குள் நுழைந்துள்ளதால் சொந்த மண்ணில் சாதிக்கும் நோக்கில் உள்ளது.
உலக் கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக இறுதி போட்டி 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்கப்பட உள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2-வது அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வெளியேற்றியது.
சாம்பியன் பட்டத்திற்கான இறுதி போட்டியில் ஒருநாள் தரவரிசையில் நம்பர் ஒன் அணியான இங்கிலாந்து, மூன்றாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்தி அணியின் பலம்
இங்கிலாந்தை பொறுத்தவரை, ஜேசன் ராய், ஜோ ரூட், இயான் மோர்கன், பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் என பேட்டிங் பட்டாளமே உள்ளது.
பந்துவீச்சில் ஆர்ச்சர், மார்க்-வுட், பிளங்கட், அடில் ரஷித் என எதிரணியை மிரட்டக்கூடியவர்கள் உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் பலம்
நியூசிலாந்து அணியில், கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், மார்டின் கப்தில், நிகோலஸ், நீஷம், கிராண்ட்ஹோம் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
பந்துவீச்சை பொறுத்தவரை, ஃபெர்குசன், டிரென்ட் போல்ட், மட் ஹென்றி, சான்ட்னர் நம்பிக்கை அளிக்கின்றனர். எனவே, பந்துவீச்சாளர்கள் அசத்தினால் தான் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியும்.
இங்கிலாந்து 4-வது முறையாக இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. அதே வேளையில், தொடர்ந்து 2-வது முறையாக இறுதி வாய்ப்பை எட்டிப் பிடித்துள்ளது நியூசிலாந்து. 2015 தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
இரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பையை முத்தமிட்டதில்லை. எனவே, கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து 27 ஆண்டுகளுக்குப் பின், இறுதிக்குள் நுழைந்துள்ளதால் சொந்த மண்ணில் சாதிக்கும் நோக்கில் உள்ளது.
மேலும், நியூசிலாந்தும் முதல் முறை பட்டம் வெல்ல போராடும் என்பதால், உலகக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத ஓர் யுத்தமாக இன்றைய இறுதிப் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Also watch: புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கொதித்தெழுந்த சூர்யா!
Published by:Anand Kumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.