இந்திய நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு காரில் சென்றபோது, முகம்மதுபூர் ஜாட் பகுதியில் விபத்து ஏற்பட்டது. அப்போது, சாலையின் மையத்தடுப்பில் மோதிய கார், தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரின் ஜன்னலை உடைத்து வெளியே குதித்த ரிஷப் பந்த், நூலிழையில் உயிர் தப்பினார். இதனையடுத்து ரிஷப் பந்த் ஓரளவு குணமடைவதற்கு 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் அடுத்து இந்திய அணிக்கு யார் விக்கெட் கீப்பர் என்ற கேள்வி தற்போது அனைவருக்கும் எழுந்துள்ளது.
பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து தேர்வு கமிட்டி ஆலோசித்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் கீப்பர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனை கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒருநாள் மற்றும் டி20 தொடரில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்றோருடன் இந்திய அணியில் களமிறங்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கிஷன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மறுபுறம், சாம்சன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இவர்களுக்கு வாய்ப்பு அதிகளவில் உள்ளது. மேலும் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக களமிறங்கிவிடலாம என்று பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, Rishabh pant, Sanju Samson