பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் பாதியிலேயே விலகினார்.
புவனேஸ்வர் குமார் 3-வது ஓவரை வீசிய போது தொடை பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதனால் போட்டி முழுவதும் பந்துவீசாமல் மைதானத்தின் வெளியே ஓய்வு எடுத்தார்.
தசைப்பிடிப்பு காரணமாக அடுத்து சில போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாடமாட்டார் என கேப்டன் கோலி தெரிவித்தார். காயம் பெரிய அளவில் இல்லாததால் அவர் விரைவில் முழு உடல் தகுதி பெறுவார் என நம்புவதாக தெரிவித்தார்.
ஷிகார் தவானைத் தொடர்ந்து புவனேஸ்வர் குமாரும் தற்போது காயம் காரணமாக விலகி உள்ளார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ராவும், புவனேஸ்வர் குமாரும் எதிரணியை திணற வைத்து வந்தனர். இந்நிலையில் புவனேஸ்வர் குமார் விலகி உள்ளதால் மாற்று வீரராக முகமது ஷமி அடுத்த போட்டியில் களமிறங்குவார்.
முகமது ஷமியும் வெளிநாட்டு மைதானங்களில் திறன்பட பந்துவீசக் கூடியவர். இந்திய அணி அடுத்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வரும் 22-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் மேலும் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பாரக்கப்படுகிறது.
Also Watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhuvneshwar Kumar, ICC Cricket World Cup 2019, ICC world cup