Home /News /sports /

கோலியை ரிட்டையர் ஆகச்சொல்ல நீ யார்?- ஷாகித் அப்ரீடிக்கு வலுக்கும் எதிர்ப்பு

கோலியை ரிட்டையர் ஆகச்சொல்ல நீ யார்?- ஷாகித் அப்ரீடிக்கு வலுக்கும் எதிர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரீடி மற்றும் கோலி

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரீடி மற்றும் கோலி

இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பாக கோலி தன் உச்சத்திலேயே ரிட்டையர் ஆவது நல்லது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரீடி தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பாக கோலி தன் உச்சத்திலேயே ரிட்டையர் ஆவது நல்லது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரீடி தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

    சமீபத்தில் ஆப்கானிஸ்தான் பவுலிங்கில் சதம் கண்டு தன்71வது சதத்தை எடுத்தார் விராட் கோலி. ஆனால் இந்த சதம் கோலியின் மறு எழுச்சி, புத்துயிர்ப்பு என்றெல்லாம் ரசிகர்கள் குதியாட்டம் போட்டு வரும் நிலையில் ஷாகித் அப்ரீடி, கோலி ஓய்வு பெறுவது நல்லது என்று கூறி நெட்டிசன்களிடமும், சில இந்திய வீரர்களிடமும் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.

    இந்திய லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா,  “டியர் அஃப்ரீடி சிலர் ஒருமுறைதான் ஓய்வு பெறுவார்கள், இந்த விவகாரங்ளிலிருந்து கோலியை விட்டு விடுங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

    ஆனால் ஷாஹித் அப்ரீடி அத்தனை கொடூரமாகச் சொல்லவில்லை, பேர் கெட்டுப் போய் சொதப்பலாகி போகக் கூடாது என்று கோலியின் மீதான அபரிமிதமான மரியாதையில்தான் அப்ரீடி சொல்லியிருக்கிறார்.



    அவர் கூறிய தொனி இதுதான், “விராட் கோலி விளையாடிய விதம், முதலில் கொஞ்சம் கஷ்டப்பட்டார், பிறகு தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். கோலி ஒரு சாம்பியன். ஆனால் ஒரு கட்டத்தில் ஓய்வு நோக்கி செல்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எனவே அவர் தன் உச்சத்தில் ரிட்டையர் ஆவதுதான் நல்லது.” என்று சாமா டிவியில் அவர் தெரிவித்தார்.
    கோலி 24,000 ரன்கள் என்ற உச்சத்தில் இருக்கும் போதே ரிட்டையர் ஆவது நல்லது என்று அப்ரீடி கூறியது கோலியின் மேல் இருக்கும் மரியாதையினாலேயே.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Indian team, Shahid Afridi, Virat, Virat Kohli

    அடுத்த செய்தி