ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தினேஷ் கார்த்திக்கினால் முடியாது என்று சொல்ல நீங்கள் யார்?- கம்பீருக்கு கவாஸ்கர் பதிலடி

தினேஷ் கார்த்திக்கினால் முடியாது என்று சொல்ல நீங்கள் யார்?- கம்பீருக்கு கவாஸ்கர் பதிலடி

sunil gavaskar

sunil gavaskar

கார்த்திக்கிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்கக் கூடாது, ஐபிஎல் வேறு, சர்வதேச கிரிகெட் வேறு இந்திய அணி வேறு என்றெல்லாம் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்த கருத்துக்கு தினேஷ் கார்த்திக் தன் மட்டையினால் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று சுனில் கவாஸ்கர், தினேஷ் கார்த்திக் பக்கம் நின்றுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கார்த்திக்கிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்கக் கூடாது, ஐபிஎல் வேறு, சர்வதேச கிரிகெட் வேறு இந்திய அணி வேறு என்றெல்லாம் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்த கருத்துக்கு தினேஷ் கார்த்திக் தன் மட்டையினால் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று சுனில் கவாஸ்கர், தினேஷ் கார்த்திக் பக்கம் நின்றுள்ளார்.

கம்பீர் கூறியதாவது: “டி20 உலகக்கோப்பை அணியில் ஏழாவது இடத்தில் களமிறங்கக்கூடியவர் பந்துவீசக்கூடியவராக இருந்தால்தான் நன்றாக இருக்கும்.

அணியில் ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்றோர் இருப்பார்கள் என்பதால், தினேஷ் கார்த்திக்கு அணியில் இடம் கொடுப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. ரோஹித்தும், விராட் கோலியும் பார்முக்கு திரும்பிவிட்டால், தினேஷ் கார்த்திக்கிற்கு இடமே இருக்காது. அடுத்ததாக தீபக் ஹூடா, பண்ட், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள். எனவே தினேஷ் கார்த்திக் இடத்தில் சில ஓவர்களை வீசும் பௌலரை சேர்க்க வேண்டும்.

இதைத்தான் நான் விரும்புவேன். தினேஷ் கார்த்திக் இனியும் தனது திறமையை நிரூபிக்க முடியாது. ஐபிஎல் வேறு, இந்திய அணி வேறு” - என்று பேசினார் கவுதம் கம்பீர்.

ஆனால் அமைதி காத்த தினேஷ் கார்த்திக் 4ஆவது போட்டியில், இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற போட்டியில் டாப் ஆர்டர் சரசரவென சரிய தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்களை குவித்து கௌதம் கம்பீருக்கு பதிலடி கொடுத்தார். இந்திய அணி இவரது இன்னிங்ஸால் வெற்றி பெற்றது என்றே ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார் தினேஷ்.

இந்நிலையில் கம்பீருக்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் பதிலடி கொடுத்திருக்கிறார், “அவரால் முடியாது என நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்.. அவர் தகுதியான வீரர் என்பதால்தான் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். முக்கியமாக அவர் தன்னை நிரூபித்தும் காட்டிவிட்டார். இனியும் அவர் என்ன செய்ய வேண்டும்? அதனையும் நீங்களே கூறிவிடுங்கள். டி20 உலகக்கோப்பை அணிக்கும் தினேஷ் கார்த்திக் நிச்சயம் தேவை” என்றார்.

First published:

Tags: Dinesh Karthik, Gautam Gambhir, India vs South Africa