#ICCWorldCup2019 | முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் எவை?

இதுவரை தோல்வியே சந்திக்காத இந்தியா 4-வது இடத்தில் உள்ளதால் அரையிறுதி வாய்ப்பு பிரகாகமாக உள்ளது. இனி பெரும்பான்மையான போட்டிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கும் நிலையில், இங்கிலாந்தை வீழ்த்துவதுடன் முதலிடத்தை எட்டிப் பிடிப்பதே இலக்காக இருக்கும்.

Web Desk | news18
Updated: June 20, 2019, 6:24 PM IST
#ICCWorldCup2019 | முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் எவை?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள்
Web Desk | news18
Updated: June 20, 2019, 6:24 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், அரையிறுதிக்கு முன்னேறும் பந்தயத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா முன்னிலையில் நீடிக்கின்றன.

நடப்பு 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் ரவுன்ட் ராபின் முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

லீக் முடிவில் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் அடியெடுத்து வைக்கும். மொத்தம் உள்ள 45 லீக் ஆட்டங்களில், இதுவரை 25 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

இதில், நியூசிலாந்து 5 போட்டிகளில் 4 வெற்றியுடன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகளில் தலா 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் முறையே 2 மற்றும் 3-ம் இடம் வகிக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, 4 ஆட்டங்களில் 3 வெற்றியுடன் 4-வது இடம் வகிக்கிறது. வங்கதேசம், 5 ஆட்டங்களில் தலா 2 வெற்றி, 2 தோல்வியுடன் 5-வது இடத்தில் உள்ளது.

9 புள்ளிகளுடன் முதலிடத்தை அலங்கரிக்கும் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதவுள்ளது. ஏறக்குறையை அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நியூசிலாந்துக்கு, முதல் 2 இடங்களுக்குள் வருவதே அந்த அணியின் முன் உள்ள சவாலாகும்.

2-ம் இடம் வகிக்கும் இங்கிலாந்து, இனி இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்தை சந்திக்க உள்ளது. அரையிறுதி வாய்ப்பு கைகூடினாலும், தற்போது டாப்- 4ல் உள்ள 3 அணிகளுடன் மோதவுள்ளதால் முதல் 2 இடங்களை பிடிப்பது கடினம்.

3-ம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, இனி வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்ரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருந்த போதும் முதல் 2 இடங்களை பிடிப்பது கேள்விக்குறியே.

இதுவரை தோல்வியே சந்திக்காத இந்தியா 4-வது இடத்தில் உள்ளதால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இனி பெரும்பான்மையான போட்டிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கும் நிலையில், இங்கிலாந்தை வீழ்த்துவதுடன் முதலிடத்தை எட்டிப் பிடிப்பதே இலக்காக இருக்கும்.

5-வது இடத்தில் உள்ள வங்கதேச அணி ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் மோதவுள்ளது. இவற்றில் மூன்று, பெரிய அணிகள் என்பதால் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடும். எனவே, அரையிறுதி வாய்ப்பு அரிதாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், இலங்கை, மேற்கிந்திய தீவுகள், தென்ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு வெற்றியுடன் முறையே 6, 7, 8, 9-வது இடங்களில் உள்ளன. ஆப்கானிஸ்தான் அணி, தான் விளையாடிய 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி, கடைசி இடத்தில் உள்ளது.

தென்ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அதேவேளையில், இலங்கை, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி பந்தயத்தில் இன்னும் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன.

Also watch: 56 சவரன் தங்க நகைகளை 2 பெண்கள் பெட்டியோடு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி!

First published: June 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...