Home /News /sports /

கங்குலி, கோலி இருவருக்குமே சொல்கிறேன், இது நல்லதல்ல- கபில் தேவ் அட்வைஸ்

கங்குலி, கோலி இருவருக்குமே சொல்கிறேன், இது நல்லதல்ல- கபில் தேவ் அட்வைஸ்

விராட் கோலி-கபில்தேவ்

விராட் கோலி-கபில்தேவ்

என்ன தவறு என்பது எப்படியும் எங்களுக்குத் தெரியவரும். பயணத்துக்கு முன்பாக இப்படிப் பட்ட சர்ச்சைகளை உருவாக்குவது நல்லதல்ல” என்று கூறினார் கபில் தேவ்.

  • Last Updated :
    ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து முன்னறிவிப்பின்றி தான் நீக்க்கப்பட்டதாகவும் கங்குலி கூறியது போல் யாரும் என்னிடம் வந்து டி20 கேப்டன்சியை விட்டு போக வேண்டாம் என்று கூறவும் இல்லை என்று விராட் கோலி கூறியது தொடர்பாக 1983 உலகக்கோப்பை வெற்றி நாயகன் கபில் தேவ் எந்தத் தரப்பாயினும் பொதுவெளியில் வந்து கண்டபடி பேசுவது சரியாகாது என்று சாடியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா தொடருக்கு செல்வதற்கு முன்பான செய்தியாளர்கள் சந்திப்பில் டி20 கேப்டன்சியை விட வேண்டாம் என்று என்னிடம் கங்குலி கேட்டதாக அவர் கூறியது சரியல்ல, அப்படி எதுவும் என்னிடம் பேசப்படவில்லை என்று போட்டு உடைத்தார் கோலி, இதற்கு கங்குலி பதிலளிக்காமல் ‘இந்த விவகாரத்தை பிசிசிஐ-யிடம் விட்டு விடுங்கள்’ என்றார்.

    ஒருநாள் கேப்டன்சியிலிருந்து கோலியை விடுவித்து ரோகித் சர்மாவிடம் கேப்டன்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலகினார், உடனேயே வாமிகா முதல் பிறந்த தினத்தையொட்டி தனக்கும் ஒருநாள் தொடரிலிருந்து விடுப்பு வேண்டும் என்று கோலி கோரியதாக அதிகாரபூர்வமாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து கோலி-ரோகித் மோதல் மோசமாகச் சென்று கொண்டிருப்பதாக ஊடகங்கள் பேசத்தொடங்கின.

    இதையும் படிங்க: புதுப்பொலிவுடன் மாறுகிறது சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம்
    இதையும் படிங்க: PAK vs WI| ரிஸ்வான், பாபர் ஆசம் சாதனை டி20 சேசிங்- மே.இ.தீவுகளுக்கு பாகிஸ்தான் 3-0 ஒயிட் வாஷ்

     

    இதனையடுத்து விராட் கோலி பரபரப்பாக அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னிடம் பேசாமலேயே தன்னை ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கியதாகவும், டி20 கேப்டன்சி பொறுப்பு பற்றி தன்னிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை என்றும் கூறினர். இதுதான் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியது.

    இதனையடுத்து கபில் தேவ் கூறியதாவது, “ஒருவர் மீது ஒருவர் குறை கூறிக்கொள்வதற்கான நேரம் அல்ல இது. தென் ஆப்பிரிக்கா தொடர் வருகிறது, அதில் கவனம் செலுத்துங்கள் அதுதான் நல்லது. கிரிக்கெட் வாரியத் தலைவர் என்பது வாரியத் தலைவர் அதே போல் அணியின் கேப்டனும் முக்கியம்தான். ஆனால் இருவரும் பொதுவெளியில் அடித்துக் கொள்வது நல்லதல்ல. சவுரவ் ஆகட்டும் கோலியாகட்டும் இது நல்லதல்ல. சூழ்நிலையைக் கட்டுப்படுத்துங்கள். நாட்டை பற்றி யோசியுங்கள்.

    என்ன தவறு என்பது எப்படியும் எங்களுக்குத் தெரியவரும். பயணத்துக்கு முன்பாக இப்படிப் பட்ட சர்ச்சைகளை உருவாக்குவது நல்லதல்ல” என்று கூறினார் கபில் தேவ்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, Rohit sharma

    அடுத்த செய்தி