Home /News /sports /

தினேஷ் கார்த்திக் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவாரா?

தினேஷ் கார்த்திக் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவாரா?

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

நான் நிச்சயமாக அவரை உலகக்கோப்பை டி20க்கு தேர்வு செய்வேன். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்”

    ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார், பல போட்டிகளில் கடைசியில் இறங்கி வெளுத்துக் கட்டி வருகிறார். 360 டிகிரி டிவில்லியர்ஸ் போல் ஆடத் தொடங்கி விட்டார் தினேஷ் கார்த்திக் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

    இடையில் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாததால் சரியாக 2 போட்டிகளில் ஆடவில்லை, ஆனால் சிஎஸ்கேவை அன்று பொளந்து கட்டி, வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார் தினேஷ் கார்த்திக்.

    இந்நிலையில் அவரை நிச்சயம் உலகக்கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடப்பதால் தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்களும் வல்லுநர்களும் கூறி வருகின்றனர், ஆனால் அணியில் ஏற்கெனவே ராகுல், ரிஷப் பண்ட் என்று விக்கெட் கீப்பர்களின் படையாக உள்ளது, இஷான் கிஷனையும் தேர்வு செய்தால் விக்கெட் கீப்பர்களின் நெரிசல் அதிகமாக இருக்கும், மேலும் 35வயதில் ஒரே ஒரு உலகக்கோப்பைக்காக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்ய முடியுமா என்ற கேள்விகளும் சில தரப்பில் எழுப்பப்பட்டு வருகின்றன.

    sunil gavaskar


    இந்நிலையில் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

    கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது நாங்கள் ஒன்றாக வர்ணனை செய்தோம், அதற்கு முன் நாங்கள் தனிமைப்படுத்தலில் இருந்தபோது ஒன்றாக நிறைய நேரம் செலவிட்டோம். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைகளில் விளையாடுவதில் அவர் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பது எனக்குத் தெரியும்.

    கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை, ஆனால் ஐபிஎல் 2022 இல் அவர் சிறப்பாக செயல்பட்ட விதம், நான் ஒரு தேர்வாளராக இருந்தால், நான் நிச்சயமாக அவரை உலகக்கோப்பை டி20க்கு தேர்வு செய்வேன். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்”என்று கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ் டாக்கில் கூறினார்.

    மேலும் கவாஸ்கர் கூறும்போது, “ஃபார்ம் முக்கியம். ஃபார்ம் தற்காலிகமானது, கிளாஸ் நிரந்தரம் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஒரு கம்பீரமான வீரர் ஃபார்மில் இருந்தால்,நீங்கள் அவரைத் தேர்வு செய்ய வேண்டும். அவர் தற்போது பேட்டிங் செய்யும் விதத்தை கருத்தில் கொண்டு, அவர் ஒரு தூய பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பர் என்று கருதப்பட வேண்டும். அணிக்கு ஒரு கூடுதல் ஆப்ஷன் இவர் மூலம் கிடைக்கிறது” என்றார் கவாஸ்கர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dinesh Karthik, IPL 2022, RCB, T20 World Cup

    அடுத்த செய்தி