ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா – இலங்கை இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி… ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

இந்தியா – இலங்கை இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி… ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

இந்தியா - இலங்கை அணியின் கேப்டன்கள்

இந்தியா - இலங்கை அணியின் கேப்டன்கள்

இந்திய அணி தொடரை கைப்பற்றி இருப்பதால் 2 போட்டிகளிலும் இடம் பெறாதவர்களுக்கு வாய்ப்ப அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே நடந்த ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ள நிலையில் நாளை 3வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி தொடரை கைப்பற்றி இருப்பதால் 2 போட்டிகளிலும் இடம் பெறாதவர்களுக்கு வாய்ப்ப அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் 64 ரன்களை எடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் ஒரு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து பேட் செய்த இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோருக்கு முதல் 2 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவில்லை. தற்போது இந்திய அணி தொடரை கைப்பற்றி இருப்பதால் இவர்களுக்கு கடைசி போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு உடல்நலம் பாதிப்பு… இளம் கிரிக்கெட் வீரர் மரணம்

நாளை மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதற்கு முன்பாக 1 மணியளவில் டாஸ் போடப்படுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைன் மற்றும் ஓ.டி.டி தளத்தை பொருத்தவரையில் இந்தியா - இலங்கை இடையிலான இந்த போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்த்து மகிழலாம்.

First published:

Tags: Cricket