விளையாட்டு

  • associate partner

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரை வெளிநாடுகளில் நடத்த திட்டம்?

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியை வெளிநாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரை வெளிநாடுகளில் நடத்த திட்டம்?
ஐபிஎல்
  • Share this:
கொரோனோ வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மார்ச் 29ம் தேதி மும்பையில் தொடங்கவிருந்த 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டியை இந்த வருடமே நடத்தி முடிக்க பிசிசிஐ தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதனால் தொடர்ந்து ஐசிசி-யின் கதவைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. கொரோனோ பரவல், உலகக் கோப்பை தொடர், பாகிஸ்தான் என ஐ.பி.எல் நடத்துவதில் சிக்கல்கள் உள்ளன.


இந்நிலையில், கொரோனோ வைரஸ் பரவல் இந்தியாவில் தொடர்ந்து வீரியம் எடுத்து வருவதால் வெளிநாடுகளில் ஐ.பி.எல். தொடரை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Also see:
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை நாடுகளில் ஐபிஎல் தொடர் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். தொடரை தங்கள் நாட்டில் நடத்த அழைப்பு விடுத்த நிலையில் பிசிசிஐ இந்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐ.பி.எல். தொடர் நடைபெறவில்லை என்றால் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் இந்த வருட ஐ.பி.எல் தொடரை வெளிநாடுகளிலாவது  நடத்த பிசிசிஐ  தீவிரம் காட்டி வருகிறது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading