வேகப்பந்து வீச்சில் பிட்சில் எடுத்த பவுன்ஸ் ஆச்சரியமாக இருந்தது:  உஷ்! பார்த்து பேசுங்க மோர்கன், கோலிக்கு கேட்டுடப் போகுது

இயான் மோர்கன்.

 • Share this:
  அகமதாபாத் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை அனாயசமாக வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

  மோர்கன் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், இதற்கு ஏற்ப மார்க் உட், ஜோர்டான், ஆர்ச்சர் இந்திய அணியை படுத்தி எடுத்தனர், ராகுலுக்கு ஸ்டம்ப் எகிறியது, ரோகித் சர்மா பவுன்சருக்கு ஷாட் சிக்காமல் கொடியேற்றினார். இஷான் கிஷன் டவுன் ஆர்டர் மாற்றப்பட்ட நிலையில் 4 ரன்களுடன் ஜோர்டானின் ஷார்ட் பிட்ச் பந்தை தமிழ் வர்ணனையாளர்கள் சொல்வது போல் மூக்குக்கு மேல ராஜா என்று கேட்ச் ஆகி வெளியேறினார். 24/3 என்று ஆன இந்திய அணியை ரிஷப் பந்த், கோலி மீட்க முயற்சித்தனர்,

  ஆனால் 25 ரன்களில் கோலி, ரிஷப் பந்த்தை 3வது ரன்னுக்கு வா வா என்று அழைத்து இழுத்து விட்டார், ரன் அவுட் ஆனார் பந்த், ஆனால் விராட் கோலி தனிமனிதனாக சில அற்புதமான ஷாட்களுடன் 77 ரன்களை விளாசி ஓரளவுக்கு நல்ல ஸ்கோரான 156/6 என்பதைக் கொண்டு வந்தார்.

  ஆனால் பட்லர், பேர்ஸ்டோவுக்கு அது போதவில்லை. 8 விக்கெட்டுகளில் இங்கிலாந்து வென்றது. இந்நிலையில் முதலில் வேகப்பந்து வீச்சு பந்துகள் எழும்பி விக்கெட் கீப்பரிடம் சென்ற வேகம் ஆச்சரியப்படுத்தியது என்றார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன். இதன் விளைவு அடுத்த போட்டிக்கு போடப்படும் பிட்சில் எதிரொலித்தாலும் ஒலிக்கும் என்று தெரியாமல் மோர்கன் கூறியதாவது:

  ஆட்டம் ஆடப்பட்ட சூழ்நிலை, பிட்சை வைத்துப் பார்க்கும் போது, ஆதில் ரஷீத் நன்றாகத் தொடங்கினார். வேகப்பந்து வீச்சாளர்கள் வீச வந்தவுடன் பந்தின் வேகம் எழுச்சி எங்களுக்கு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது.

  முதல் பாதியில் எங்கள் பவுலிங் அசாத்தியமானதாக இருந்தது. பிட்சும் முழுதும் அப்படியே இருந்தது மாறவில்லை. விரைவில் துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தால் அது நிச்சயம் கேள்விகளை எழுப்பும்.

  ஜோஸ் பட்லர் ஒரு உலகத்தரம் வாய்ந்த  வீரர். அவர் சராசரி 50 ஸ்ட்ரைக் ரேட் 150 என்று வைத்துள்ளார். அவர் பிரமாதமான பார்மில் இருக்கிறார். பட்லரிடம் நாம் அதிகம் கூற வேண்டியதில்லை அவரே பார்த்துக் கொள்வார்.

  அவரிடமிருந்து என்100வது போட்டிக்கான தொப்பியை வாங்கும்போது எனக்கு கண்ணீர் வந்தது. அவர் எனக்கு சிறந்த நண்பர், எங்கள் குடும்பங்களும் நெருங்கிய குடும்பங்கள். அவர் எனக்குக் கூறிய வார்த்தைகள் என் இதயத்தை குளிரிவித்தன. நான் அதற்காக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

  இவ்வாறு கூறினார் இயான் மோர்கன்.
  Published by:Muthukumar
  First published: